பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேச சரித்திரம்

31

கவன் 1615-வது வருஷத்தில் தங்களது பண்டகசாலையை மசூலிப் பட்ணத்திலிருந்து ஆர்மகாமுக்கு (Armagan) மாற்றிக் கொண்ட இங்கிலீஷ் காரர்களது வியாபாரம் அங்கு திருப்திகரகரமாகவில்லை என்ற விஷயத்தைக்கேள்வியுற்றான். இந்த ராஜாவின் கீழுள்ள காளஹஸ்திப் பாளையக்காரர் மூலமாக ஆங்கிலப்பண்டக சாலை மேற்பார்வை அதிகாரியாகிய டே துரை (Mr. Day)யை சமுத்திரக்கரை வரைக்ரக்கும் விஸ்தரித்திருந்த தனது நாட்டில் வந்து தங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அதற்குச் சம்மதித்த டேதுரையும் இந்த அரசனை அவனது சந்திரகிரியிலிருந்த அரண்மனையில் சந்தித்துப் பேசினார். முடிவில் 1640-வது வருஷத்தில் கரையோரமாக இங்கிலீஷ்காரர்களுக்கு ஒரு துண்டு பூமி அளிக்கப்பட்டது. முதல் முதல் இங்கிலீஷ் காரர்களுக்குச் சொந்தமாக ஏற்பட்டது அதே. பக்கத்திய அமைமதியற்ற முரட்டு ஸ்வபாவம் பொருந்திய சிற்றசர்கள் எதிர்த்தால் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் அங்கவர்கள் ஒரு கோட்டையை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு இங்கிலாந்தின் பரம்பரை யாகப் போற்றப் பட்டுவரும் கிறிஸ்தவ பக்தர் பெயரை ஒட்டி ஸெயின்ட் ஜார்ஜுக் கோட்டை (Fort Saint George) யென்ற பெயரை இட்டார்கள்.

தலைக்கோட்டைக் சண்டையால் தென் இந்தியாவின் நன்மைக்கும் சுகத்துக்கும் மிக்க இடையூறுகள் ஏற்பட்டன. விஜயநகர மேன்மையும் ஐசுவரியமும் அதன் அரசன் இறந்ததும் அவனுடனேயே போய்விட்டன. அந்த ராச்சியத்தின் சிறப்பும் மகிமையும் இருந்தவிடம் தெரியாமல்