பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

47

ஆற்காடு கட்டப்பட நவாப் சாதத்உல்லாகான் வேரையும், பக்கத்து நாட்டையும் தனது சகோதரன் குலாம் அலி கான் என்றவனுக்கு ஜாகீராக அளித்தான். அவனுக்குப் பிறகு பாகிர் அலி என்ற அவனது மகன் பட்டம் பெற்றபொழுது ஏற்பட்ட ஒரு பஞ்சகாலத்தில் ஒரு லங்கர்கானாவை ஏற்பாடு செய்து அது நடை பெற்றுவர வேண்டிய பொருளும் ஏற்பாடு செய்தானாம். இந்த லங்கர்கானா இப் பொழுதும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை (Tiruvannamalai):- இவ்வூர் இதே பெயருடன் கூடிய தாலூகாவின் பிரதான நகரம். இங்குள்ள குன்று சமுத்திர மட்டத்திற்கு 2,700 -அடி உயரம் வாய்ந் துள்ளது. சுற்றிலும் அனேகம் மைல் தூரத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு காட்சியாக இது ஏற்பட்டிருக்கிறது.

இதன் அடிவாரத்தில்தான் பெயர்பெற்ற திருவண்ணா- மலைக்கோவில் (படம் 3, 4) ஏற்பட்டிருக்கிறது, இந்த ஸ்தலத்தில் தேஜோமூர்த்தி ஏற்பட்டிருப்பதாக ஐதீகம். இங்கு முக்கியமான திருவிழா நடந்தேறுவது கார்த்தியை மாதத்தில். பௌர்ணமி திதியன்று மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும். சுவாமியும் மலையைச் சுற்றி சுமார் எட்டு மைல் தூரம் ஊர்கோலம் கொண்டுவரப் படுவதும் வழக்கம். இச்சம்பந்தமான ஒரு கதையும் ஏற்பட்டுளது.

கைலயங்கிரியில் ஒருநாள் பார்வதி தேவியார் வேடிக்கையாகச் சிவபிரானது கண்களைப் பின்பக்கமாகச் சென்று தனது கைகளால் மூடினார். உடனே எங்கு பார்த்தாலும் நாடாந்தகாமாக இருள் சூழ்ந்து கொண்டு விட்டது. தேவர்களது வேண்டுகோளின்மேல் சிலபிரான் யோசனை