பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

வட ஆற்காடு ஜில்லா

1757-வது வருஷத்தில் கர்னல் ஆண்டெர்னன் என்றவன் ஊரை நாசப்படுத்திய போதிலும் கோட்டையைப் பிடித்துக் கொள்ள முடியாமற் போயிற்று. அப்பொழுது அது பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்த பாகத்தில் பிரதானமான இடமாக இருந்து வந்தது. அப்பொழுது பிரெஞ்சு சைனியம் இங்கிலீஷ்காரர்களை இரு முறை துரத்தி யடித்ததாகப் தெரிகிறது. 1759-வது வருஷத்தில் பிரிட்டன் என்றவர் எதிர்த்தும் பயன் பெறவில்லையாம். சில நாட்களுக்கெல்லாம் பிரெஞ்சுப் போர் வீரர்கள் கலகம் செய்ய ஆரம்பித்ததால் சீக்கிரத்தில் அவர்கள் திருப்தி செய்யப்பட்டிருந்தபோதிலும் அவ்வருஷம் முடிவு பெறுவகற்குள் அக்கோட்டை கூட என்றவர் வசப்பட்டு விட்டது. 1760- வது வருஷத்தில் பிரெஞ்சுக்காரர்கள் லாலியின் கீழாகவும், மூவாயிரம் மஹாராஷ்டிர வீரர்கள் புஸ்ஸி என்றவரின் கீழாகவுமாக இவ்வூருக்கு முன்வந்து தோன்றினார்கள் நேரிட்ட சண்டையில் பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியடைந்து புஸ்ஸி சிறை செய்யப்பட்டார். இந்த ஜெயம் இங்கிலீஷ்காரர்களுக்கு மிகவும் முக்கியமானது. 1780-வது வருஷத்தில் லெப்டினெண்ட் பிலிண்ட் என்றவர் லாகவமாய் வேலை செய்து கோட்டை ஹைதர் வசப்படாமல் காப்பாற்றிக் கொண்டார். சரித்திர சம்பந்தமான இவ் விஷயங்கள் இந்து தேச சரித்திரங்களில் விவரமாகக் காணலாம்.

படைவீடு (Padaved): இந்தப் பாழான ஊர் இந்த ஜில்லாவில் முக்கியமான இடங்களில் ஒன்று. இப்பொழுது இதன் ஜனத்தொகை சொல்பமெனினும் ஒரு காலத்-