பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

வட ஆற்காடு ஜில்லா

முதலாவது பராந்தக சோழன் மகன் ராஜாதித்தன் ராஷ்டிர கூட மன்னனாகிய மூன்றாவது கிருஷ்ணனால் தோற்கடிக்கப்பட்டான். பராந்தகன் தெற்கே மதுரை, இலங்கை இவ்விடங்களில் தனது சைன்னியத்தை நடத்திக் கொண்டு அந்த இடங்களை பிடித்துக் கொண்டிருக்கையில் மூன்றாவது கிருஷ்ணன் தனக்குள் கங்க தேசத்தை ஆண்ட பூதுங்கனைக்கொண்டு இந்த தக்கோலச்சண்டையில் ராஜாதித்தனைத் தோற்கடித்தது மன்னியில் அச்சமயம் ராஜாதித்தன் யானையின் மேலிருந்தபடியே இறந்ததால் அவனுக்கு "யானைமேல் தூங்கினவன்" எனப்பெயருண்டாயிற்று. இந்த சண்டையில் ஜயம் பெற்றதைக்கொண்டே கிருஷ்ண ராஜாவும் "கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவர்" எனப்பட்டப் பெயர்கொண்டு கி.பி.945 முதல் 970- வரையில் காஞ்சிமா நகரை ஆண்டான். ராஜாதித்தன் இச்சண்டையின் முன்னர் திருநாமநல்லூரில் மலையாள தேசத்திய ஜனங்களைக்கொண்டு பெரிய சைன்னியத்தை வைத்துப் பரிபாலித்து வந்தனனாம்.

Standard Press. Triplicane, Madras.