பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமை வாழ்வு ஏன் பிறந்தது? கொத்தடிமை வாழ்வில் 603 LO நிகரற்றது. அந்நியர் ஆதிக்கம் நம்மீது மலைபோல் குந்திச் சவாரி செய் வதை நம்மிடையே வரவேற்கும் சக்திகள் எவை? அடிமைத் தனம் தலைவிரிகோலமாய் ஆட நாமிடை உருவாகி நின்ற பழக்கவழக்கங்கள் உணர்ச்சி ஓட்டங்கள் எவை? அடிமை வாழ்வின் தோற்றுவாய் எது? என்றெல்லாம் விடுதலை வீரர்கள் முனையைக் கரைத்த காலம் அது. 1935-ல் உதித்த பாடல் (விருத்தம்) நல்லாரை உழைப்போரைப் பறையர் என்றார். நயவஞ்ச முடையோர்மேற் சாதியென்றார் பொல்லாத கொடியவரை மன்னர் என்றார். பொய்உரைத்த கயவர் தம்மைக் குருக்கள் என்றார் சொல்லாரும் தாயினத்தை அடிமை என்றார் சூதுமிகும் ஆசாரம் சமயம் என்றார் இல்லாத பொய்வழியில் சென்ற தாலே இந்நாட்டார் அடிமை வாழ் வெய்தினாரே! ஜீ-7

97

97