பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நிமிர்ந்து சண்டை போடு!' ஏகாதிபத்தியப் போராட்டம் 'ஜம்' என்று முறுக்கேறி வந்தகாலம். காங்கிரஸ் கொடியின் இடதுசாரிகளின் செல்வாக்கு சொற்சக்தி குதிபோட்டு முன்னேறிய காலம், தேச பக்த வீர இளைஞர்களின் வழிபடு கடவுளாக விளங்கிய சுபாஷ் பாபு தலைமையில் இடதுசாரி ஒற்றுமைக் குழு கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் சோஷலிஸ்டுகள், ராயிஸ்டுகள். பார்வர்டுபிளாக்கர்கள். கிசான் சபைக்காரர்கள், தொழிற் சங்கவாதிகள் ஓரணி வகுத்து நின்ற சீரணி, தெம்பும் திராணி யும் பெற்ற வலதுசாரிகளை, பிற்போக்காளர்களை, ஏகாதி பத்தியப் பித்தர்களைக் குடல் கலங்கச் செய்து கொண்டிருந்த காலம். தமிழ் மாகாணக் காங்கிரஸ் கமிட்டியை 77க்கு மேற்பட்ட காலம். டதுசாரி அங்கத்தினர்கள் அணிபெறச் செய்த அன்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் முழக்கம் கேளாத பேச்சு உப்புச்சப்பில்லாத சோறு. எத்தனை எத்தனை அரசியல் மேடைகளிலோ பாடுகிற வர்கள் - கேட்கிறவர்கள் கண்களில் தீப்சபாறி பறக்க விந்தை பல புரிந்த பாட்டு இப்பாட்டு. இது பிறந்தது 1939 தொடக்கத்தில். நிமிர்ந்து சண்டை போடு தோழா தமக்கா யுலகைத் தாழ்த்திடு தோஷம் சார்ந்த பிரிட்டிஷ் சர்க்கார் நாசம் 98

(நிமிர்)

98