பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளைச் சிரிப்பு நொண்டிச் சிந்து கொள்ளைச் சிரிப்பு வந்ததே-குப்பன் குழவிக்கல் சாமியென்று கும்பிட்டபோது பிள்ளைவரம் பெற்றிட வென்று வள்ளி பேரரசு வேப்பமரம் சுற்றியபோது கள்ளை மொந்தையாகக் குடித்து-சுப்பன் காட்டேறி ஆடுதென்று கத்தியபோது சள்ளை தரும் பாவம் தொலைக்க-பொன்னி சாக்கடையே தீர்த்தமென்று மூழ்கியபோது (கொள்) கொள்ளைச் சிரிப்பு வந்ததே-ராமன் கோவிலுக் கழுதுபாப்ப ராகியபோது எள்ளும் நீரும் வாரியிறைத்து-கண்ணன். எத்துவாளிப் பார்ப்பானை வந்தித்தபோது புள்ளினக் கருடனைக் கண்டு- சீதை பூமியில் விழுந்து 'கிருஷ்ணா' என்றிட்டபோது கள்ளக்காவி வேடதாரிக்கே-லீலா கடவுள் பணிவிடைகள் செய்திட்டபோது 110

(கொள்)

110