பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடி விழுந்தது பல்லவி

இடிவிழுந்தது கடவுள்‌ மேல்‌ - எங்கும்‌ நாத்திகம்‌

(இடி)

அனுபல்லவி படீர்படீர்‌ என்று மக்கள்‌ பந்தமுற்றுமே

தெறிக்க

அடிமேல்‌ அடிவிழுந்ததே ஆத்திகம்‌ சாக

(இடி)

தொகையரு பன்றியிலும்‌ நாயிலும்‌ பகுத்தறிவு சேர்மனிதன்‌ பழிப்புறக்‌ கண்டதாலும்‌

பலதொல்லை

தின்றிடத்‌ தொழிலாளர்‌ சாகையில்‌

பணக்காரர்‌ கொழுத்ததாலும்‌ அன்றியும்‌ விதவைகளை அழவைத்து ஆண்மக்கள்‌ அக்கிரமம்‌ செய்ததாலும்‌ அஞ்சிக்‌ கிடந்தபேர்‌ மிஞ்சித்‌ தவித்தார்கள்‌ அன்புச்‌ சிவத்தை உமிழ்ந்தார்‌

பாட்டு

அடிமைத்தனத்தின்‌ எல்லை அநியாயக்காரர்‌ தொல்லை சுத்தமெய்‌ அறிவு தோன்றும்‌

115-

115