பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுக் கரடி, நகை, கைதி போல் கன்னியரை வீட்டிலே பூட்டி வைத்தார்-கிளியே வெஞ்சினம் பொங்குதடி! உலக முழுதும் சுற்றும் உரிமை யாடவர்க் குண்டாம் விலகி யொழிப்பதுவே-கிளியே மெல்லியலார் முறையாம்! பெண்களுக் கொன்றுமில்லை பேச உரிமையில்லை மண்மிசைப் பெண்பிறப்பு-கிளியே மண்பிறப் பாச்சுதடி! ஆவேசமாய் எழுவோம் அடிமை விலங்கொடிப்போம் ஜீவானந்தம் மொழிபோல் - கிளியே சேமம் பல பெறுவோம். 133

(பெண்)

133