பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியாகமே வாழ்வு! புரட்சி, பொது உடைமை என்ற சொற்கள் மந்திரச் சொற்களைப் போல், இளைஞர்களின் உள்ளங்களில் உணர்ச்சித் தீச்சுவாலை விட்டெரியும்படி செய்துகொண்டிருந்த காலம். மீரத் சதி வழக்கு வீரர்கள், பகவத்சிங்கின் கூட்டாளிகள் ஆகிய புரட்சிக்காரர்களின் நடைமுறைத் துணிச்சலும். தியாகப் பெருமையும் வாலிப உலகை- அதன் சூடேறிய ரத்தத்தையும் முறுக்கேறிய நரம்புகளையும் அம்மானை ஆடிக் கொண்டிருந்த காலம். தமிழக இளைஞர்களை சமதர்ம லட்சியத்தை நோக்கி, தியாகத் திசையில் திருப்பத் தேவை ஏற்பட்ட காலம் அது. அப்பொழுது முளைத்த பாட்டு இந்தப் பாட்டு. பல்லவி வாலிபத் தோழர்களே ! தியாகந்தான் வாழ்வு, நல்வீரர்களே! சரணங்கள் கூலிகள் ஓய்வும் இன்பமும் கூட கேலிசெய் வீணர் தினம் வாட 148 (வாலிபத்)

(வாலிபத்)

148