பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்திடாதோ! அந்த நாளும் வந்திடாதோ சொந்த சுதந்திரம் வந்தது என்றும் நிந்தனையின்றி சந்ததம் வாழும் அனைவரும் கூடி அரசியல் நாடி அதில்பிரதி நிதித்துவம் அனைவர்க்கும் தேடி ஜனநா யகமுறை தழுவிக் கொண்டாடி இனப்பகை பணச்சதி இல்லையென் றாகும் உழவனும் மில்லில் உழைப்பவ னோடு உடலால் அறிவால் உழைப்பவ னோடு அழுவதும் சாவதும் ஆச்சவக் கேடு அல்லல் தீர்ந்தவர் ஆனந்தம் எய்தும் ஆணினம் பெண்ணினம் நிகரென நோக்கும் அடிமையும் ஆண்டையும் இலையெனும் போக்கும் பேணும் உரிமையின் பெருமை எல்லோர்க்கும் பிழையா துலகில் பெருமை எல்லோர்க்கும் நீதியில் லாப்பெரும் சூதுக் காரன் நிதிமுத லாளி கொடுங்கொலை காரன் போதும் போதுமிப் படுபழி காரன் அச் சூதை விழுங்கும் சுடரொளி வீசும் (அந்த) 159 (அந்த) (அந்த) (அந்த) (அந்த)

(1948)

159