பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்திருக்கிறோம். இவ்வாறு உதிர்த்ததையும் நாம் உள்ளத்தை வெல்லமாக உருக்கவல்ல பாட்டு இது. காலுக்குச் செருப்பு மில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை பாழுக் குழைத்தோ மடா-என் தோழனே பசையற்றுப் போனோ மடா. குண்டிக்கொரு துண்டு மில்லை கொல்வறுமை தாள வில்லை ஒண்டக் குடிசை யில்லை-என் தோழனே உழைத்திளைத்துப் போனோ மடா. (காலுக்கு) (காலுக்கு) நோய்நொடிகள் வெம்புலி போல் நூறுவிதம் சீறு வதால் தாய்தந்தையர் பெண்டு பிள்ளை-என் தோழனே சாய்ந்து விழக் கண்டோமடா (காலுக்கு) பாலின்றிப் பிள்ளை அழும் பட்டினியால் தாய ழுவாள் வேலையின்றி நாம ழுவோம்-என் தோழனே வீடுமுச் சூடும் அழும். 21 (காலுக்கு) கையிலொரு காசு மில்லை கடன்கொடுப் பாரு மில்லை செய்யும்தொழில் கிட்ட வில்லை-என் தோழனே திண்டாட்டம் கொல்லுதடா (காலுக்கு) வாங்கிய கடன் தீர்க்க வக்கில்லை யானா லும் ஏங்கி யிரந்துண்ண வோ-என் தோழனே எங்கள் மனம் கூசுதடா.

(காலுக்கு)

21