பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெனின் வழியிலே 1935-ல் பிறந்த பாட்டு இது. தமிழகத்தில் அன்று நிலவிய ஆரம்பகால சமதர்ம இயக்கத்தில் லெனின் வழிக்கு இருந்த மதிப்புக்கு இந்தப் பாட்டு ஒரு எடுத்துக்காட்டு. நுட்ப திட்பமாக மார்க்சீயம் - லெனினீயம் தான் இல்லாவிட்டாலும், மொத்தமாக காந்தீயத்தைவிடச் சரியான அரசியல் தலைமையாக இருக்க முடியும் என்ற அன்றைய புரட்சிகர- இளைஞர் உலகத் துடிப்பை எதிரொலிக்கும் பாட்டு இது. பல்லவி லெனின் வழியிலே- நிதம் ஒழுகுவீர் அனுபல்லவி தனிஉடைமையால் சனிவிளைந்ததால் சார்பொதுஉடைமை தழுவுதலேமேல் சரணம் உழைப்பவர் துயர் ஒழிய முயல்வீர் உழவ ரின்நிலை உயர்ச்சி பயில்வீர் இளைப்ப வர்க்கின்றே எழுச்சி புகல்வீர் இறக்க நேரினும் புரட்சி நவில்வீர் 50 (லெனின்) (லெனின்)

(லெனின்)

50