பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழைக்‌ கடவுள்‌ விழி பிதுங்க கோவில்கள்‌ மூடிப்‌ பள்ளி திறந்தார்‌ வாழும்‌ தொழிலாளர்‌ கூட்ட மொன்றே வையத்தி லெங்கணும்‌ ரஷ்யா நன்றே

(சோவி)

வாடாத மக்களும்‌ வாழ்வ தெங்கு? மாதர்‌ சுயேச்சை மணப்ப தெங்கு?

நாடக முற்போக்கு காண்ப தெங்கு? நல்லிளைஞர்‌ வேகம்‌ பூண்ப தெங்கு? கோடாலி

மண்வெட்டி ஆள்வ தெங்கு?

குக்கிரா மங்கள்‌ தழைப்ப தெங்கு? தேடும்‌ மனித சமாஜ மெங்கு? சீர்மிகும்‌ ரஷ்யப்‌ பொன்னாட்டி லன்றோ?

59

(சோவி)

59