பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்டோபர் புரட்சி இந்தப் பாட்டு 1936-ல் பிறந்தது. தமிழகம் எங்கும் பாடப்பட்ட பாட்டு சரியான தீர்க்கதரிசனம் கொண்ட பாட்டு இது. சடசடவென்றே முறிந்து ஜார்விழுந்த காரணம் தரணியெங்கும் பொதுவுடைமை தழைப்பதற்கு தாரணம் படபடத்துத் துடிதுடித்துப் பாமரர் முன்னேகுறார் பணம்சுமந்த ராட்சதர்கள் பதறிநொந்து சாகிறார் வசியமிக்க மார்க்சின் கொள்கை மாநிலத்தில் பலிக்குதே மகிழும் ரஷ்யா லெனின் படைத்த வாழ்வினால் ஜ்வலிக்குதே பசியெழுப்பும் புரட்சிவெந்தீ பார்முழுதும் எரியுதே படையைஏவி விடும்ஏகாதி பத்யவாழ்வு சரியுதே சடசட} 62

(சடசட)

62