பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளித் தோழா 1935-ம் ஆண்டு ஊட்டியில் இப்பாட்டு இயற்றப் பட்டது. வர்க்க உணர்ச்சி கொண்ட தொழிலாளி-பாட்டாளி வர்க்கத் தின் நவயுகப் பிரளய எழுச்சியை- எழுச்சியின் இடிமுழக் கத்தை, தத்ரூபமாகச் சித்தரித்துக் காட்டும் நொண்டிச்சிந்து இந்தப் பாட்டு. தமிழகத்தில் ஸ்தாபனரீதியான தொழிலாளர் இயக்கம் வெடித்து வீறுகொண்டு எழத்தொடங்கிய காலத்தில் உருவான பாடல் இந்தப் பாடல். நொண்டிச் சிந்து பாடுபடும் பாட்டாளித் தோழா-இந்தப் பாருலகின் சொந்தக்காரன் வேறில்லை நீதான் (பாடு ) மாடுகளோ மேய்ந்த தழையை-மென்று மனதாரத் தின்னுதடா மாநிலத்திலே ஆடுகள் கடித்த தழையை-இங்கு அசைபோட்டுத் தின்னுவதை அறியார் உண்டோ?

64

64