பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடிக்கால் பூதம்

நாளைக்கு மே தினம். 'புரட்சி' என்ற வார இதழுக்கு ஒரு பாட்டுக் கொடுத்தாக வேண்டும். இரவு 12 மணிக்கு எப்படியும் எழுதிக்கொடுத்த பின்புதான் தலைசாய்ப்பது என்ற தீர்மானம்; சிந்தனை ஓர் அடி எடுக்க அலைந்து திரிகிறது. அந்நிலையில் மேஜைமீது கிடந்த ஓர் ஆங்கிலநூல் க ணில் பட்டது. அது ஒரு சிறந்த ஜெர்மன் ஆசிரியரான ரெணிபுலாப் மில்லர் எழுதிய போல்ஷ்விசம் அகமும் முகமும் Mind and Face of Bolshevism) என்ற நூல். நூலைப் பிரித் தேன். ஒரு பக்கத்தில் ஒரு பாடல். ரஷ்ய மூலத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு. என் உள்ளத்தைக் கவர்ந்தது. அது தொழி லாளர் பற்றிய பாட்டு. எனக்குப் பருத்தி புடவையாய்க் காய்த்தது போல் ஆயிற்று. அந்தப் பாடலைத் தழுவி எழுதிய தமிழ்ப் பாடல்தான் இந்தப் பாடல். போரணியில் பேரணியாகத் திரண்டு நின்ற தமிழகத் தொழிலாளர்களைப் பலமுறை கண்களில் நெருப்புப் பொறி பறக்க எழுச்சி வசப்படச் செய்த பாடல் இப்பாடல். பிறந்தது 1934ல். கோடிக்கால் பூதமடா - தொழிலாளி கோபத்தின் ரூபமடா - நாடி எழுந்ததுபார் — குவலயம் நாற்றிசையும் அதிர

71

71