பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செக்கு மாடு போலுழைத்தாய் தேவைக்கொன்றும் கிட்டவில்லை செக்குலக்கை போல் கொழுத்தார் செல்வர் டம்பாச்சாரியானார் தோழா உந்தன் சிறுமைதீர வழியறிந்து வாழாய் (செக்கு) பாடுபட்டு மேனிநொந்தாய் பலனெதுவும் வாய்த்ததுண்டோ? மாடிவீட்டில் பஞ்சணையில் மலரில்வீணர் புரளுகின்றார் தோழா இதை மாற்றும் வழியைக் கேட்டறிந்து வாழாய்! (செக்கு) - ராப்பகலாய் உழைத்திளைத்தாய் நாய்ப்பிழைப்பாச் சுன்பிழைப்பு ஆர்ப்பரிப்பால் உல்லாசத்தால் கல்லுடைத்தாய் மண்சுமந்தாய் காசுனக்குக் குதிரைக்கொம்பு பல்லக்குகள் கார்சவாரி பவுசுகளோ சோம்பேறிக்குத் தோழா இந்தப் பழியகலத் துணிந்துநின்று வாழாய்! (செக்கு) wtran - ஆனந்தம் செல்வர்பிழைப்புத் தோழா - இந்த அக்கிரமத்தை சுக்கலாக்கி வாழாய் 75 (செக்கு) உண்ணும் உண வற்றதாலே உலர்ந்தவத்தல் உன்குடும்பம் வெண்ணெயில் செதுக்கிவைத்த பொம்மை போல் ஜமீன் குடும்பம் தோழா-வீணர்

வெலவெலக்க வீறுகொண்டு வாழாய் (செக்கு)

75