பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளியும் நடைமுறை மதமும் கண்ணிகள் - கெட்ட கேடுகளும் பட்ட பாடுகளும் கேட்டிடில் பல்விதமே - இங்கும் பட்டவர்த்தனமாய்ச் சொல்லில் பாட்டாளிக்கும் பாதகம்தான் மதமே. புல்லுருவிப்போல அரிப்புழுப் போன்ற புரோகிதர்க்கே நிதமே - நலம் - சொல்லி ஏழைகட்குத் தண்ட வரியிடும் சூதர் பொறி மதமே. வஞ்சகக் குள்ளநரி யெனும் பண்டிதன் வாய்வயிற்றுக் கிதமே - தந்து - துஞ்சும் பழம்கொள்கை ஒப்பென் றெளியாரைத் தொல்லை செய்யும் மதமே. வேர்வை சிந்தும் தொழிலாள ருலகத்தை வீழ்த்திமிதித் ததமே - செய்யும் - சேவையை வாழ்வெனக் கொண்டிடும் செல்வர்க்கு 'ஜே' என்றிடும் மதமே.

84

84