பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் அவலநிலை மாற ஏழைத் தொழிலாளர் வாழ்வு இன்பம் சூழ்கவே இன்பம் சூழ்கவே - புவித் துன்பம் வீழ்கவே வாழையடி வாழையாக வந்தவீணர் கூட்டம், போக வாழ்வடையப் பாடுபட்டு வாடுகின்றனர் வாடுகின்றவர் திண் டாடுகின்றவர் (ஏழை) தொகையரு புளிக்கின்ற கூழுக்கும் எரிகின்ற வெய்யில்தன்னில் புழுவாய்த்துடித் துழைக்கிறார் பொந்துண்டு பாம்புக்கு வளையுண்டு நண்டுக்குப் புகலின்றியே தவிக்கிறார் அளிக்கின்ற காசுக்கும் உதைக்கின்ற உதையையும் அழுதழுதுமே தின்கிறார் அடிமையால் கவலையால் மடையராய்க் கடையராய் ஆறாத்துய ருண்கிறார் களிக்கின்ற பணக்காரர் கொழுக்கின்றதைக் கண்டும் கர்மத்தை நொந்தழுகின்றார் கருத்துண்டு கையுண்டு உருப்படுவ மெண்ணாது காலமெல்லாம் தொழுகிறார்

88

88