பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாப்பநாயக்கன்பாளையம் செங்கோட்டையாகத் திகழ்ந்ததோடு அவ்வூர் மக்கள் வெள்ளமாகத் திரண்டு வேலை நிறுத்தத்தை முழுமூச்சோடு எல்லாவகையாலும் ஆதரித் தனர். அந்தப் சரித்திரப் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் போராட்டத்தில் பங்கு கொண்ட விந்தையைச் புதுமை என்றே சொல்லலாம். உணர்ச்சி வெள்ளத்தில் நீந்திய பால்மணம் மாறாச் சிறுமிகள் வேலைநிறுத்தக் கூட்டங்களில் பாட, பாட்டுக்கள் எழுதித் தரும்படி ஜீவாவுக்குப் பணித்த அன்பின் ஆணைக்கு இணங்கி எழுந்த பாடல்கள் இவை. தோழர் கே.பி. ஜானகி, தோழர் இராமதாஸ் முதலிய வர்கள் பாட்டுத் திறத்தால் தமிழகம் எங்கும் செல்வாக்குப் பரப்பிய பாடல்கள் இவை. அதுமட்டுமல்ல, தேசம் சுதந்திரம் பெறலாகாதா?" 'புரட்சி செய்வோம் துன்பம் போகும்' முதலிய பாடல்கள் காங்கிரஸ் மேடைகளிலும் சகல பகுதியினராலும் விரும்பி வரவேற்கத்தக்க பெருமையை அடைந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. "தோழர்கள் வாழ்க்கையில் ஆனந்தம் வேறில்லை" என்ற பாடலை ஜானகியோ, இராமதாசோ உணர்ச்சிப்பெருக் கில் சூரலெடுத்துப் பாடினால் சமதர்ம உணர்வினர் பிணைப் புண்டு நிற்பர்; தொழிலாளர்கள் உணர்ச்சியில் துள்ளுவர். தேசம் சுதந்திரம் பெறலாகாதா ஏகாதிபத்தியம் வந்து புகுந்து ஏறிமிதித்திட நொந்தோம் சோகம்தவிர்க்க நாமினிஒன்று சூழ்ந்து துணிய லாகாதா - ஜெகமதில் எங்கணும் இழிவே பெருகவும் சேமம் ஒழிந்திட நின்றோம் 91 எங்கள் இந்தியா (தேசம்) (தேசம்)

(தேசம்)

91