________________
அந்தரங்கம் புனிதமானது 43 எனினும் அவர் தானாகவே எதுவும் பேச விரும்பவில்லை. அவன் திடீரென்று தனக்குத்தானே பேசிக்கொள்கிறமாதிரி முனகினான்: "ஐ ஆம் ஸாரி!-இது ரொம்பவும் வெட்கப்படத் தக்க அவக்கேடான விஷயம்" என்று ஆங்கிலத்தில் கூறினான். அதைத் தொடர்ந்து அவன் அவரிடம் கேட்டான்: "நான் எதைக் குறித்துச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?" அவர் கொஞ்சமும் பதட்டமில்லாமல் 'புரிகிறது என்பதாகத் தலையை ஆட்டினார் அவரது பதற்றமின்மையைக் கண்டபோதுதான் அவனுக்கு ஓர் ஆவேசமே வந்துவிட்டது. "நீங்கள் இப்படிப்பட்ட மனிதராக இருப்பீர்கள் என்று நான் கற்பனை கூடச் செய்ததில்லை..."-. அவன் உணர்ச்சி மிகுதியால் முறுக்கேறிய தனது கைகளைப் பிசைந்து கொண்டான். காற்றில தலை கலைந்து பறக்கக் குமுறுகின்ற உள்ளத்து உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு மார்பு பதைபதைக்க சீறிச்சீறி மூச்சு விட்டான். வேணு' டோண்ட் பி ஸில்லி...நீ என்ன சின்ன குழந்தையா?... பொறுமையா யோசி" என்று அவனது தோளில் தட்டிக் கொடுத் தார் சுந்தரம் "எஸ்...எஸ்...ஐ ஆம் அன் அடல்ட்" என்று கடித்தவாறு சொன்னான. பிறகு தொடர்ந்து ஆங்கிலத்திலேயே கூறினான்: பல்லைக் அந்த அந்நிய மொழியில்தான் ஒரு தகப்பனும் மகனும் இது போன்ற விஷயங்களை விலாதிக்க முடியும் என்று எணணினான் போலும்' உங்களுக்கு அந்த டெலிபோன் சம்பவம் நினைவிருக்கிறதா ? அன்றிலிருந்து உங்களை நாள் கவனித்தே வருகிறேன்... என்னுடைய தந்தை இப்படி ஒரு ஸ்திரீ லோலனாக இருப்பார் என்று நான் நினைத்ததே இல்லை. இது நம் குடும்பத்தைப் பற்றிய பிரச்னை அல்லவா?... உங்கள் வயதுக்கும் தரத்துக்கும் உகந்த செயலா இது? ...இந்த அம்மா இருக்கே அது ஒரு அசடு! நீங்கள் அவங்களை வாழ்க்கை பூராவும் இப்படியே வஞ்சித்து வந்திருக்கிறீர்கள் !..." அவன் பேசும்போது குறுக்கிடாமல் சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகைத்துக்கொண்டிருந்த அவர், திடீரென இப்போது இடைமறித்துச் சொன்னார்: "ப்ளீஸ்! உன் அம்மாவை இது சம்பந்தமாய் இழுக்காதே! உனது அபிப்பிராயங்களை. அது எவ்வளவு வரைமுறையில்லாமலிருந்தாலும்