பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தரங்கம் புனிதமானது 45 என்ன அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல் அவன் மௌன மானான்.சுந்தரம் மெளனமாகப் பெருமூச்செறிந்தவாறு வானத்தைப் பார்த்தவாறிருந்தார்...இவனிடம் இது குறித்துத் தான் பேசுவது என்பதைவிட, என்ன பேசக்கூடாது என்பதிலேயே அவர் கவனமாக இருந்தார். அவன் திடீரென அவரைப் பார்த்துக் கேட்டான்: செய்து "தாத்தா சொவ்வியிருக்கிறார் - நீங்களும் அம்மாவும் கா தவித்துக் கலியாணம் கொண்டீர்கள் என்று... இத்தக் காதல் விவகாரங்கள் எல்லாம் கடைசியில் இப்படித்தான் ஆகுமோ !" என்று சிறிது குத்தலாகவும் கேலியாகவும் கேட்டு அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். சுந்தரம் சிகரெட்டைப் புகைத்தவாறு சற்றுக் குனிந்த தலையுடன் யோசித்தவாறிருந்தார். ஒரு பெருமூச்சுடன் முகம் நிமிர்ந்து வேணுவைப் பார்த்தார். எதைப்பற்றியோ அவனிடம் விளக்கிப் பேச நினைத்து, 'வயது வேறு; அனுபவம் வேறு. அனு பவம் வேறு; அதிலிருந்து பெறுகின்ற முதிர்ச்சி வேறு!' என்று அவருக்குத் தோன்றியதால், அவர் அவனுக்கு விளக்க நினைத்த விஷயத்தை விடுத்து வேறொன்றைப் பற்றிப் பேசினார். "சரி இது பற்றியெல்லாம் உன்னைப் பாதிக்கின்ற விஷயம் என்ன? அதைச் சொல்லு அவர் இப்படிக் கேட்டதும் அவனுக்கு ஒரு பக்கம் கோபமும் இன் னொரு பக்கம் 'இந்த மனிதர் என்னதானாகி விட்டார் ?” என்ற பரிதாப மும் ஏற்பட ஒரு சிறு புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தான்: "அப்பா!...நீங்கள ஒரு புரபசர் ; கௌரவமான குடும்பத்தீவ் பிறந் தவர். நான்கு குழந்தைகளின் தந்தை இத்தனை வயதுக்குமேல் நீங்கள் ஒரு விடனைப்போல திரிவதனால் உங்கள் குடும்ப அந்தஸ்து. சமூக அந்தஸ்து இவையாவும் சீர்குலைந்து விடுகிறதே - என்று உங்க ளின் வயது வந்த மகன் கவலைப்படுவது தப்பு என்கிறீர்களா ? அதில் அவனுக்குச் சம்பந்தமில்லை என்கிறீர்களா?" அவன் பேசும்போது அவர் மகனின் முகத்தை நேருக்குநேர் கூர்ந்து பார்த்தார் அவன் முகத்தில் ஒரு பக்கம் வெளிச்சமும் மறு பக்கம் இருளும் படிந்திருந்த போ திலும், தன் முகத்தை நேருக்குநேர் பார்க்க முடியாமல் அவனுடைய பார்வை நாலு புறமும் அலைவதை அவரால் கவனிக்க முடிந்தது "வேணு... நீ வயது வந்தவன் என்று சொல்லுகிறாய். அது உண்மையும்கூட, ஆனால், வயது வந்த ஒரு மணிதனுக்குரிய