________________
46 ஜெயகாந்தன் சிறுகதைகள் வளர்ச்சியை உன்னிடம் காணோமே!... முதலில் ஒரு தகப்பன் என்ற முறையில் என்னுடைய 'பர்ஸனல்' விவகாரங்களை - அந்தரங்க விவகாரங்களை உன்னிடம் பரிமாறிக் கொள்வது அவசியம் என்று எனக்குத் தோன்றவில்லை. நீ எனது சமூக அந்தஸ்து, குடும்ப அந்தஸ்து முதலியவைபற்றிக் கவலைப்படுவதாகச் சொல்கிறாய். ரொம்ப நல்லது. அந்த எனது தகுதிகளுக்கு ஒரு குந்தகமும் வராது. அதனைக் காப்பாற்றிக் கொள்வதில் உன்னைவிட எனக்கு அக்கறை உண்டு. அவற்றுக்கு இழுக்கு வரும் பட்சத்தில் அதனை எதிர்த்துச் சமாளிக்கும் வலிமை எனக்கு உண்டு என்பதை உனக்கு நான் எப்படி நிரூபிப்பது ? ஏன் நிரூபிக்க வேண்டும் ?..." - அவர் குரல் தீர்மானமானதாகவும் கனமான தாகவும் இருந்தது. அவர் கொஞ்சமகூடப் பதட்டமோ குற்ற உணர்ச்சியின் குறு குறுப்போ இல்லாமல் தன்னிடம் பேசுகிறதைக் கேட்கையில் வேணு வுக்குத் 'தான் செய்வதுதான் தப்போ' என்ற சிறு பயம் நெஞ்சுள் துடித்தது. இருந்தாலும் இத்தனை வயதுக்குமேல் இவ்வளவு கேவலமாக ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தும் என்ன தைரியத்துடன் தன்னிடம் வாய்ச் சாதுரியம் காட்டுகிறார் இவர்' என்ற நினைப்பு மேலோங்கி வர, அவன் கோபமுற்றான் "எனக்கு ஏன் நிரூபிக்க வேண்டும் என்றா கேட்கிறீர்கள்? நான் உங்கள் மனைவியின் மகன் நீங்கள் அவளுக்குத் துரோகம் செய்கி றீர்கள்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆங்கிலத்தில் கூறினான். ம்... அவள் என்னைப்பற்றி உன்னிடம் செய்தாளா, புகாரி என்ன? என்று அவர் அமைதியாகக் கேட்டார். "இல்லை..." "பின் எதற்கு நீ அத்து மீறி எங்கள் தாம்பத்திய விவகாரத்தில் குறுக்கிடுகிறாய்?..." "ஐ ஆம் யுவர் ஸன் !...நான் உங்கள் மகன்-இது என் கடமை." "நோ ஸன்னி!...இது உன் கடமை இல்லை! இதில் தலையிடும் அதிகாரம் ஒரு மகனுக்கு இல்லை மகனே!" அவனுக்கு அழுகை வேணு உதட்டைக் கடித்துக்கொண்டான் வந்தது...அவரை வாய்க்கு வந்தபடி வைது தீர்த்து விட்டு இனிமேல் அவர் முகத்திலேயே விழிக்கக் கூடாத அளவுக்கு உறவை முறித்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று தோன்றியது. அவனுடைய தவிப்பையும் மனப் புழுக்கத்தையும் கண்டு அவ ருக்கு வருத்தமாக இருந்தது. தனக்குச் சம்பந்தமில்லாத, தன்னால் தாங்க முடியாத விஷயங்களைப் பொருட்படுத்தாமல் ஒதுக்க முடியாத