பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தரங்கம் புனிதமானது 47 பலவீனத்தால் அந்த இளம் உள்ளம் இப்படி வதைபடுகிறதே என்ற கனிவுடன் அவன் கையைப் பற்றினார் அவர். 'வேணு..." சிறு குழந்தை மாதிரி பிணங்கிக் கொண்டு அவன் அவர் கையை உதறினாள். இப்போது அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அழுகை அடைக்கும் குரலில் அவன் நெஞ்சு இளகக் கேட்டான்: " அப்பா...எனக்கு இந்த விஷயம் ரொம்ப அவமானமா இருக்கே... நீங்க என்னத்துக்கு .. இப்படியெல்லாம் நடந்து கொள்ளணும்.." அவர் தன்னுள் சிரித்துக் கொண்டார்.

  • மை பாய்! வயது வந்த ஆண் பிள்ளை என்று மீசை முறுககற நீ இப்படிக் கேட்கலாமா? உன்னோட நல்ல உணர்ச்சி எனக்குப் புரியுது. என்னைப்பத்தித் தப்பாத் தோணினால், அதை மனசிலேயே அடக்கி வை...காலப் போக்கிலே 'எது சரி. எது தப்பு - எந்த அளவுக்கு எது தப்பு எது சரி'ன்னு உனக்குப் போகப் போக புரியும்... நீ செய்த காரியங்களை எல்லாம் உன்மேல் பாசமுள்ள ஒரு தகப் பன்கிற முறையிலே நாள் மன்னிக்கறேன். யோசித்துப்பார்...தகப்ப னின் தனிப்பட்ட விஷயங்களைத தெரிஞ்சுக்கறதுக்காக ஒரு மகனே அவனை உளவு பாக்கறதும், கள்ளத்தனமா அவனது அந்தரங்கங் களில் பிரவேசிக்கிறதும் ரொம்பவும அவமானகரமானது இல்லையா?... நாள் உன்னுடைய ஸ்தானத்திவே இருந்தா இந்தச் செயலுக்காக வாழ்க்கை முழுவதும் வெட்கப்படுவேன்

அவர் அவனை மனனித்து விட்டதாகவும், அவன் செய்த குற்றத் துக்கு அவளை வெட்கப்படும் படியாகவும் கூறுவதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எனினும் தொடர்ந்து அவரிடம் தான பேசி அவரைத் திருத்துவதோ, அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்வதோ தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்று அவன் உணர்ந்தான். 44 அம்மா !"" 4 அவர்கள் பெற்ற பிள்ளைகளிலேயே ரமணியம்மாளை அம்மாவென் றும், சுந்தரத்தை அப்பாவென்றும் அழைப்பவன் வேணு ஒருவன் தான். மற்றவர்கள் அனைவரும் ' மம்மி ' 'டாடி'தான்.