பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 ஜெயகாந்தன் சிறுகதைகள் மாவு வராந்தாவில் வந்து நின்று வேணு ' அம்மா 'வென்று அழைத்தபோது. ரமணி அம்மாள் சாவகாசமாக ஈனிசேரில் சாய்ந்து 'ஜூலியன் ஹக்ஸ்லி' எழுதிய ஒரு புத்தகத்தைப் புரட்டி சுவாரஸ்ய மான ஒரு பாராவைப் படித்துக்கொண்டிருந்தாள். வேணு அந்தப் புத்தகத்தின் அட்டையைக் கூர்ந்து பார்த்து வாய்க்குள் படித்துக் கொண்டான்: 'நாலெட்ஜ், மொராலிட்டி அன்ட் டெஸ்டினி !" அம்மா! நீ படிக்கறதுக்கு இடைஞ்சலா வந்துட்டேனா?” ச்சீ! இதென்ன ஃபார்மாலிட்டி ? வா... இப்பிடி உக்காரு..." என்று கனிவுடன் அழைத்தாள் ரமணி அம்மாள். வேணு வராந்தாவில் கிடந்த ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான். அவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ரமணியம் மான் அவனை வாஞ்சையோடும், தனக்கு இவ்வளவு பெரிய பிள் ளை இருப்பதைத் திடீரென உணர்ந்த பெருமிதத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கை விரல்களின் நகத்தைப் பிய்த்தவாறு குனிந்த தலையோடு ஏதோ யோசித்துக் கொண்டிருந் தான். இத்தனை நாட்களுக்குப் பிறகு அவன் தன் மனத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் ஏதோ ஓர் அந்தரங்கமான அவனது பிரச்னை குறித்துத் தனனோடு ளிவாதிக்கவோ யோசனை கேட்கவோ வந்திருக் கிறான் என்பதாக எண்ணி ஒருவகைப் பூரிப்புக்கு ஆளாகிவிட் டிருந்தாள் அவள். எனினும் அவன் பேசத் தயங்குவதைக் கண்டு அவளே ஆரம்பித் தாள்: என்ன வேணு. இங்கே அடிக்கிறதோ?" உனக்கு லைஃப் ரொம்ப போர்

  • ம்..." என்று தலை நிமிர்ந்த வேணு, 'போர் அடிக்கிதுங்கறது இல்லே...எனக்கு இந்த லைஃப் பிடிக்கலே நான் என்ன இருந் தாலும் ஒரு மொபஸ்ல டைப்தானே ? நீங்கள்ளாம் ரொம்ப நாகரிகமா அல்ட்ரா நாகரிகமா வாழறவாழ்க்கை எனக்குச் சரிப்பட்டு வரலே..." என்று சொல்லிவிட்டு மீண்டும் தலை குனிந்து உள்ளங்கையில் விரலால் சித்திரம் வரைய ஆரம்பித்தான்.

சற்று நேர மௌனத்துக்குப் பின் ரமணியம்மாள் சொன்னாள்:

  • உன்னுடைய குழப்பம் என்னன்னு எனக்குச் சரியா புரிஞ்சுக்க முடியலே... நாங்க இத்தனை வருஷமா எப்படி வாழ்ந்து வரோமோ