பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 ஜெயகாந்தன் சிறுகதைகள் உனக்கு இங்கே உன் விருப்பப்படி இருக்கறதுலே என்ன தடை?...ம். சொல்லு வேணு!" என்று அவன் முகத்தைப் பார்த்தபோது அவன் மெளனமாக அவளை வெறித்துப் பார்த்தான். "அதனாலே - உனக்கு ஊருக்கே திரும்பிப் போகணுங்கறதுக்கு வேற ஏதோ காரணம் இருக்கணும்னு எனக்குத் தோணுது...என்ன சரிதானே?" என்று லேசான சிரிப்புடன் கேட்டாள் ரமணி அம்மாள். " ஆமாம் ..வேற காரணம் இருக்கு..." என்று கூறித் தன் மனத்துள் கிட்ந்து அரிக்கும் தந்தையைப் பற்றிய உண்மைகளை அவ ளிடம் கூறுவதற்கு வார்ததைகள் கிடைக்காமல் அவன் தவித்தான். "வேணு!... அதுவுமிலலாமல் நீ என்னென்னவோ சொல்றியே! ஏதோ வெளிப்பூச்சுனனும் பொய்யின்னும் இந்த வாழ்க்கையைப் பத்தி ஏதோ சொன்னே. என்ன விஷயம்? நீ எப்படி எங்களைப் பத்தி அப்படி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரலாம்... நீ எதை வெளிப்பூச்சுன்னு நெனைக்கிறே! எல்லா வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அளவுக்கு ஏதோ ஒரு விதமான வெளிப்பூச்சு இருக்கத்தான் செய்யும் வேணு... நீ எதைப்பத்தி சொல்றே? உன் மனசு ரொம்ப ஆழமாக் காயப்பட்டுத்தான் இப்படி ஒரு வார்த்தை உன் வாயி லிருந்து வருதுன்னு எனக்குத் தோணுது...என்ன நடந்தது சொல்லேன்... இப்போது அவன் சட்டைப் பையிலிருந்து கர்சீப்பை எடுத்து மூக்கையும் கண்களையும் அழுந்தத் துடைத்துக் கொண்டான். முகமே சிவந்து குழம்பியிருந்தது

  • அம்மா... எனக்கு அப்பாவின் நடத்தை புடிக்கலே..." என்று வானத்தை வெறித்தவாறு முகம் திரும்பிக் கூறினான். அவளிட மிருந்து பதிலில்லை. அந்தத் தைரியத்தில் அவள் முகத்தைத் திரும்பிப் பாராமல் தொடர்ந்து சொன்னான்:

உனக்கும் அப்பாவுக்கும் மனஸ்தாபம் வருமே, உங்கள் குடும்பத் தில் அமைதி என்னாலே கெட்டுப் போகுமேன்னு நெனச்சி நெனச்சித்தான் நான் இத்தனை நாளா குழம்பிக்கிட்டே இருந்தேன். கெட்டுப்போகிற ஒரு குடும்பத்தின், அமைதி மட்டும் கெடாம லிருப்பது எத்தனை நாளைக்கு முடியும்?... அவர் உனக்குத் துரோகம் பண்றாரு அம்மா. இது எனக்குத் தெரிஞ்சும் நான் இதை உன்னிடம் மறைச்சு வெச்சா அந்தத் துரோகத்துக்கு நானும் உடந்தைன்னு அர்த்தம்... அதனால்தான் இந்த அவமானகரமான குடும்பத்திலே இருக்க எனக்குப் புடிக்கலே. அவரை நானா திருத்த முடியும் ?.. முடிஞ்சா நீ திருத்து...இது உங்க விஷயம்... நான் போறேன்"