பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 37 ஜெயகாந்தன் சிறுகதைகள் அவன் திடீரென்று கொதித்துப் போய்ச் சொன்னான்: " முழுசாத் தெரிஞ்சுதான் அம்மா பேசறேன். ஐ ஹாவ் புரூப்ஸ்! என்னால் நிருபிக்க முடியும்...அவருக்கு வந்த போன்கால்... அவர் பேசறதை நான் என் காதாலே கேட்டேனே.. அன்னிக்கிராத்திரி தியேட்டாலே அதுக்காகவே போயி இந்தக் கண்ணாலே பார்த்தேனே...அவர் ரூமில் இருக்கற டிராயாலே அவருக்கு வந்த லவ் லெட்டர்ஸ் ஒரு பைலே இருக்கே...அவா முகத்திலேயே அதை வீசி எறிஞ்சப்ப அவ ராலேயே அதை மறுக்க முடியலே.. அம்மா !" பல 'ஓ! இட் ஈஸ் எ ஷேம் ஆன் யூ புரூப்ஸ் இருக்காம் புரூப்ஸ் ! வேணு, பெரிய மனிதர்களையும் பிரபலமானவங்களையும் அவதூறு செய்யறதையே தொழிலாகொண்டிருக்கே சில மஞ்சள் பத்திரிகைங்க.. அவங்ககிட்டேயும் அதுக்கெல்லாம் புரூப் இருக்கும். அதுக்கெல்டரம் புரூப் இருக்காதுன்னா அதை 'மஞ்சள் பத்திரிகை 'ன்னு கௌரவமான வங்க ஒதுக்கறாங்க? அது ஒரு மனுஷனுடைய பெருமை, திறமை எல்லாத்தையும் விட்டுட்டு அவனுடைய அந்தரங்கமான வீனங்களைப்பத்திப் பேசறதை ஒரு பிழைப்பா வெச்சிருக்கிறதனாலே சமுதாயத்துக்கோ நாகரிகத்துக்கோ கேடுதானே ஒழிய, லாபமில்லே அதனாலேதான நாம மஞ்சள் பத்திரிகைகளைக் கண்டா அருவந்தது. ஒதுக்கறோம்?...இப்ப நீ பண்ணி இருக்கியே இதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு. நீயும் அவங்க மாதிரி தான் 'புரூப் இருக்கு என்கிறே. வேணு. எனக்கு உன்னை நெனச்சி ரொமப வருத்தமா இருக்கு...ஷேம். இட் இஸ் எ ஷேம் ஆன் யூ என்று ரமணியம்மாள் கரதுகளைப் பொத்திக் கொண்டாள். "நீ நெஜமா,இப்படியெல்லாம் செய்தியா ? . வேணு.. எவ்வளவு உயர்ந்த மனுஷனை எவ்வளவு கேவலமா நடத்திட்டே!" என்று கூறுகையில் உடலும் மனமும் அவளுக்குப் பதறின. "இவள் என்ன மனுஷி! இவள் என்ன மனைவி? புரியாமல் திகைத்தான் வேணு. என்று " அம்மா-உன்னுடைய நல்லதுக்கும் இந்தக் குடும்பத்தோட நன்மைக்கும் தான் தப்புன்னு தெரிஞ்சும் நான் அவர் விஷயத்திலே அப்படி நடந்துக் கிட்டேன்..." என்று அவளுடைய நிலையைப் பார்த்து அவன் சமாதானம் கூற முயன்றான். "வேணு..எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா...அவரை நெனச்சி இல்லே... உன்னைப் பாக்கறப்போ எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா...நீ அப்படி நடந்துக்கலாமா? ஒரு தகப்பன் கிட்டே ஒரு மகன் ஐயோ! என்னாலே கற்பனை செய்து பார்க்கக்கூட முடியலே வேணு!"