பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தரங்கம் புனிதமானது அவர் உனக்குத் துரோகம் செய்யறார்னும் தெரிஞ்சு..." 55 53 "இட் இஸ் மை பிராப்ளம்!" என்று அவள் இடைமறித்துக் கூவினாள் : " அது என் விவகாரம் !... உனக்கு எங்க தாம்பத்தியம் பற்றிய அந்தரங்கத்தில் தலையிட என்ன உரிமை ? " என்று அரு வருத்து உடவ் சிவிர்த்தாள் : 'சொல்றேன் கேள்: நாங்க இருபத்தைஞ்சு வருஷம் அமைதியா வாழ்ந்திருக்கோம். கடைசி வரைக்கும் அப்படியே வாழ்வோம்.. அதனால்தான் அந்த அமைதியை -அந்தச் சந்தோஷத்தைக் கெடுத்துக்கற எந்த விஷயத்திலேயும் நான் தலையிட விரும்பறது இல்லே... எனக்கும் லேசாத் தெரியும். அதனால் என்ன ?. என்னை விட அவருக்கு இனிய துணை யாரும் இருக்கமுடியாது ..நீ சொல்றியே அதைப்பத்தி எனக்கு மனசுக்குள்ளே ஆழ்ந்த வருத்தம் உண்டு தான்- இதைச் சொல்லும்போது எவ்வளவு அடக்கியும் அடங்காமல், அவளது இதயத்தில் பாறையாய் ரகசியமாய்க் கனத்துக் கிடக்கும் ஓர் ஆழ்ந்த துயரம் உருகிற்று ..கண்களில் தாரை தாரையாய் வடியும் கண்ணீரை-முக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்த வாறே அங்கிருந்து எழுந்து சென்று வராந்தாவில் ஒரு நிமிஷம் நினறு தன்னைத் திடப்படுத்திக்கொண்டு மீண்டும் மகனின் எதிரே வந்து அமர்ந்தாள் 'வேணு! நீ நினைக்கிற மாதிரி வாழ்க்கை அவ்வளவு 'சிம்பிள் ' இல்லேடா. அது ரொம்ப சிக்கலானது. குழப்பமானது வேணு. அந்தச் சிக்கலிலும் அந்தக் குழப்பத்திலும் எப்படி ஒரு குடும்பத்தை அமைதியாகவும் சந்தோஷமாகவும் நடத்தறதுங்கறதுதான் வாழ்க் கைக் கலை ', பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லேன்னா அன்பு காதல்ங்கறதுக்கெல்லாம் அர்த்தமே இல்லை. உன்னை மாதிரி நான் நடந்துக்கிட்டிருந்தா இந்தக் குடும்ப அமைதியும் அவரோட கௌரவமும் குலைஞ்சு போறதுக்கு நானே காரணமாகிப் போயிருப் பேன் என்னுடைய பொஸஸ்ஸிவ்னஸ் 'னாவே... என்னுடைய பிடியில் அவர் இருக்கணும்கறதுக்காக -இந்தக் குடும்பத்தோட அமைதியையும், அவரோட கௌரவத்தையும், என் குழந்தைகளின் எதிர்காலத்தையும் விலையாக் கொடுக்கிற அளவு நான் சுயநலக்காரி யாகறது எவ்வளவு கேவலமானது!... இப்படியெல்லாம் நான் சொல்றதைக் கேட்டு நான் ஏதோ ரகசியமான சோகத்தை அனுப விச்சிக்கிட்டு வாழறேன்னு நீ கற்பனை செய்து கொள்ளாதே! ஆனால், என் மனசிலே ஒரு சின்னத் துயரம் இல்லாமல் இல்லை. முழுமையான ஆனந்தம் என்பது அவ்வளவு சுலபமானதா என்ன?..