________________
அந்தரங்கம் புனிதமானது 55 நிச்சயம் தாண்டி வந்துடுவார்... வாழ்க்கை ரொம்பச் சிக்கலானது வேணு. வாழ்க்கையைப் புரிஞ்சுக்கணும். இந்தப் புத்தகத்தைப் படிச்சுப்பார்-உனக்கு இது மாதிரி சிந்தனைகள் விசாலமான பார்வை யைத் தரும். " வேணுவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவன் மனத்தில் தாத்தாவும் பாட்டியும் மட்டும்தான் லட்சியத் தம்பதியாய்த் தோன்றினர். அவனுக்குப் புரியவே இல்லை: 'அவர்கள் தாத்தாவும் பாட்டியு மாகவே கலியாணம் செய்து தாத்தாவும் பாட்டியுமாகவே தாம்பத்யம் நடத்தி வாழ்ந்திருக்கவில்லை ' என்பது. 5 சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் மாலை. கல்லூரியிலிருந்து வந்த சுந்தரம் உடைகளைக் களைந்து கொண்டிருந்தபோது, இரண்டு நாட் களுக்கு முன்பு சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விட்ட வேணுவிடமிருந்து வந்த கடிதத்தைக் கொண்டு வந்து அவரிடம் தந்தாள் ரமணி அம்மாள். அதில் முக்கியமான கடைசி வரிகள் இவைதாம் : "நான் தாத்தாளின் பேரனாகத்தான் இருக்க லாயக்கானவன் வந்துவிட்டேன். உங்கள் வாழ்க்கை நெறிகள் புரியாமல் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும் இப்படிக்கு, வேணு.' கடிதத்தைப் படித்து முடித்ததும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்... 'பழைமை வாதிகள் என்பவர்கள் எழுபது வயதுக்கு மேல்தான் இருக்கணும்ங்கறது இல்லே...இருபது வயசிலேயும் இருக்கலாம்..." என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். ரமணி அம்மாள் சற்று நேரம் அவர் முகத்தையே ஏக்கத்தோடு வெறித்து நோக்கினாள்... அவள் கண்கள் சிவந்து கலங்கின.