பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4. இருளைத் தேடி... பத்து வருடங்களுக்குப் பின், சிறிதும் எதிர்பாராத நிலையில், சற்று முன் பட்டணத்துச் சந்தடியில் சந்திக்க நேர்ந்துவிட்ட பட்டுவும் ருக்குவும் அந்த ஓட்டலின் தனியறையை நாடி வந்தனர்; காப்பி குடிக்கவும், கொஞ்சம் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசவும் அது வசதியான இடம். வாழ்க்கைச் சந்தியில் இருவர் சந்தித்து இணைய முடிவது எவ்வளவு சாதாரணமும் இயல்புமாகுமோ, அதே அளவு இயல் பானதுதான் இருவர் சந்தித்துப் பிரிந்து விலகிப் போய் விடுவதும்... இந்தப் பத்தாண்டுகளில் இருவருக்குமே எத்தனையோ தரப்பட்ட, வகைப்பட்ட சிநேகிதிகள் கிடைத்திருப்பர். வாழ்க்கையும் எத்தனையோ தரத்தில், வகையில் பேதமுற்று வேறுபட்டிருக்கும்... விலகிப் போன அந்த நட்பின் நினைவு கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய்ந்து - அல்லது புதிய புதிய வாழ்க்கையின் மாற்றங்களினால், அறிமுகங்களினால் மூடப்பெற்று உள்ளே புதைந்து கொண்டிருந்த சமயத்தில் சற்று நேரத்துக்கு முன் திடீரென்று அவர்கள் இருவரும் வாழ்க்கைச் சந்தியின் சாதாரண இயல்புக்கேற்பவே.பட்டணத்துச் சந்தடியின் நடுவே, இதற்கு முன் பார்த்தறியாத எத்தனையோ புதிய முகங்கள் ஆயிரக்கணக்கில் நிமிஷத்துக்கொரு அலையாய்க் கடந்து மறைந்து கொண்டிருக்கும் யந்திர இயக்கத்தில் எதிர் எதிரே மோதிக் கொள்வது போல் எதிர்ப்பட்டு, மோதலைத் தவிர்க்க நின்று, நேருக்கு நேர் முகம் பார்த்தபோது அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது... யந்திரம்போல் இயக்கம் கொண்டு விட்டதனால் மட்டும் மனித ராசி: யந்திரமாகி விடுமா...? அந்தச் சந்திப்பைத் தவிர்க்க நினைத்தவள் போல் தன்னையறியா மல் முகம் திரும்பிய பட்டு, அரை விநாடி நிலைகுலைவுக்குப் பின்னர், நிலேமையைச் சமாளித்தவளாய் அந்த எதிர்பாராத சந்திப்பின் சந்தோஷ உணர்வை ஏற்றுக் கொண்டான் அப்படித்தான் அவ ளால் முடிந்தது; அடுத்த விநாடியே அவ்விதத் தயக்கத்திற்காக அவள் உள்ளுற வருந்தினாள். மகிழ்ச்சியால் விளைந்த திகைப்பு என்றே அதை எண்ணினாள் ருக்கு. இந்த நிமிஷம் அது தான் உண்மை...