________________
இருளைத் தேடி 59 அணிந்திருந்த கறுப்பு நிறப் புடவையில் பளபளக்கும் வெள்ளிப் பூக்கள் மின்னின. பட்டுவின் தலையலங்காரம் ருக்குவின் பின்னலைப் போல் ஒழுங்காக இல்லை. கூந்தல் கலைந்தது போலவே வாரப்பட் டிருந்தது; காதோர முடி மட்டும் கவனத்தோடு சுருளாக்கப்பட் டிருந்தது. கழுத்துப் பக்கம் இறங்கிய ரவிக்கை வெட்டு; வயிறும் புஜங்களும் வெளித் தெரிய அணிந்த சேலைக் கட்டு: இவை இரு வருக்குமுள்ள வித்தியாசங்கள். எவ்வளவுதான் வாட்டமுற்றிருந்த போதிலும் மாறாத பொன்னிறம், இருபத்தைந்து வயதுக்கு மேல் பிராயம் தோற்றும் முகப் பொலிவு, மலர்ந்த விழிகள், கருத்தடர்ந்த கூந்தல் - இவையாவும் இருவருக்கு முள்ள ஒற்றுமைகள் பட்டுவின் சிறப்பு, அந்த நீண்ட மோவாய்; வனப்புடன் மெலிந்து அழகுற உயர்ந்த உருவம் ருக்குவுக்கு, வடிவாயமைந்த அதரங்கள் ; வசீகரமிக்க புன்னகை ; சிலைபோன்ற சிற்றுருவத தோற்றம்-மற்றபடி ஓர் இளம் விதவை யை போன்ற எளிமை - அதுவே ருக்குவின் சிறப்பு பேசுவதற்கு நிறைய இருப்பதனாலேயே, என்ன பேசுவது எனற ஒரு பிரமிப்புடன் இருவரும் மௌனமாய் ஒருவரை ஒருவர் அளப்பது போலுமஒப்பிடுவது போலும் பார்த்துக் கொண்டிருந்தனர். ருக்கு அன்பு வழியச் சிரித்தவாறே பேச்சை ஆரமபித்தானா 'பாட்டி 2" என்று அவள இழுக்கவும், பட்டு தோள்களை உயர்த்தி உதட்டைப் பிதுககி னாள்: "ரெண்டு வருஷமாச்சு அப்ப நீ தனியாகவா இங்கே இருக்கே ?...நீ எப்ப, யாரோட பட்டணத்துக்கு வநதே?" என்று பரபரப்போடு கேட்டாள் ருக்கு. 'பாட்டி செத்தபபுறம, அங்கே ஊர்லே யாரு இருக்கா எனக்கு? நம்ம அரசமரத்தாதது மாமிதான் அவா வீட்டிலே எனனை அழைச் சிண்டு போயி வெச்சிருந்தா... தேனொழுகப் பேசி, வெயாவை வழிய வேலை வாங்கறதிலே மாமி ரொமயக் கெட்டிக்காரி அதனாலே எனனன்னுதான் இருந்தேன். ரெண்டுவேளை சாப்பாட்டுக்கும் துணிக்கும் மட்டுமில்லே, கெளரவம ஒரு குடும்பத்தோட இருக்க மேன்னுதான்.ஆனா அவா ளும் நொடிச்சுப் போனா...அந்த மாமா யாருக்கோ ஜாமீன் கையெழுததுப் போட்டு, அவன மோசம் பண் ணிப்பிட்டானாம்... எல்லாம் போச்சு!... அப்பதான மாமியோட சொந்தக்காரர் யாரோ வந்து பொண்ணே எங்களோட அனுப் புங்கோ 'ன்னு சினிமாவிலே சேத்து விடறதா அழெச்சுண்டு வந்தா -.- அப்புறம் அதெல்லாம் ஒண்ணும் சரிப்பட்டு வரலை. இப்ப நான்