பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 ஜெயகாந்தன் சிறுகதைகள் ஒரு சிநேகிதியோட தனியா இருக்கேன் "-அவள் பேச்சே யார் மீதோ குற்றப்பத்திரிகை வாசிப்பது போல் இருந்தது. பட்டு பேசுகின்ற பேச்சிலிருந்த தயக்கமும் வரட்சியும் அவள் பொய் கூறுவதுபோல் புரிந்தது ருக்குவுக்கு. 'இப்ப யாரோடயோ இருக்கேன்னியே, யாரந்த சிநேகிதி? "ம்.. உனக்குத் தெரியாது" என்று, கறாராய், 'நீ தெரிந்து கொள்ள வேண்டியதுமில்லை' என்பது போல் கூறினாள் பட்டு. இந்தப் பத்து வருடங்களில் எனக்குத் தெரியாத, என்னிலும் அந்நிநே ான்யமான சிநேகிதிகள் இவளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும் சரி, அதனால் என்ன? அதனால் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இவளுக்குத் தோன்றாதா? நான்தான் அவனைப் பற்றிக் கேட்கிறேன் ... அவளுக்கு என்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி யில்லையோ ?' என்று ருக்கு எண்ணமிட்டுக் கொண்டிருந்த நேரத் தில் "உன் அப்பாவுக்கு உடம்பு குணமாயிடுத்தா ?... அவருக்கு வைத்தியம் பார்க்கத்தானே நீங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு இங்கே யாரோ சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீங்க?" என்று பட்டு கேட்டதும்,தன்னைப் பற்றி இவ்வளவு ஞாபகத்தோடு விசாரிக்கும் பட்டுவை ஒரு கணத்தில் தான் தவறாக எண்ணி விட்டதைக் குறித்து வருத்தமுற்றாள் ருக்கு. எனினும் அடுத்த கணமே பட்டு வின் முகத்தில் தோன்றிய ஒரு வெறும் புன்னகையைக் கண்டதும் ருக்குவுக்குத் தோன்றியது: 'இவள் இரண்டு மன நிலையில், இரண்டு ஆளாய், இரண்டுங் கெட்டவளாய் இருக்கிறாள்...' எனினும் அவள் கேள்விக்குப் பதில் சொன்னாள் ருக்கு : " அப பவே - வந்து கொஞ்ச நாளைக் கெல்லாம் அப்பா காலமாயிட்டா..." -அப்போது ஓட்டல் சர்வர் அறையின் கதவுக்கு மேல் தலைநீட்டிப் பார்த்து உள்ளே வந்தான். "என்ன சாப்பிடுவோம்?.." என்றாள் ருக்கு. வெறும் காப்பி..." "ரொம்ப அழகா இருக்கு. இவ்வளவு காலத்துக்கப்புறம் பார்த் திருக்கோம்'-என்று ஒரு குதூகலச் சிரிப்புடன் " ரெண்டு ஸ்பெஷல் ஸ்வீட் கொண்டு வாங்கோ 1" என்று சரிவரைப் பார்த்துச் சொன் னாள் ருக்கு. ருக்கு, சர்வரிடம் சொல்லிக் கொண்டிருந்த அந்தச் சிறிய இடை நேரத்தில் பட்டு தன் மயமாகி, ஏதோ சிந்தனையுடன் தலை குனித்தி ருந்தாள். சர்வர் போனபின், அவள் நிலையை அனுதாபத்தோடு,