பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருளைத் தேடி 61 என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல் வெறித்துப் பார்த்தாள் ருக்கு. திடீரெனத் தலைநிமிர்ந்தாள் பட்டு. ருக்குவைப் பார்த்து மீண்டும் ஒரு வெற்றுப் புன்னகை காட்டினாள்.. முகத்தில் ஒரு பொய்ப் பொலி வுடன் 'ம்..நீ இப்ப அதே -அந்த சொந்தக்காரர் வீட்டிலேதான் இருக்கியா?" ஆமாம், அந்த வீட்டிலேயேதான் இருக்கேன்.. ஆனா தனியா இருக்கேன்." 'தனியாவா? அப்படீன்னா ஏதாவது உத்தியோகம் பாக்கறயா?" என்று கேட்டவாறே ருக்குவின் கையருகே மேசையின் மேலிருந்த நீண்ட காகிதச் சுருணையை எடுத்து "பார்க்கலாமா ?" என்றாள் பட்டு. லேசான தலையசைப்பால் அனுமதியளித்த ருக்கு, பட்டுவை உள்ளும் புறமும் அளப்பதுபோல் தீர்க்கமாய்ப் பார்த்துக் கொண் டிருந்தாள். அப்போது சர்வர் இரண்டு தட்டுகளில் ஸ்வீட்டைக் கொணர்ந்து வைத்தான்; காபியும் காரமும் சொல்லி அவனை அனுப்பினாள் ருக்கு. அந்தக் காகிதச் சுருணையைப் பிரித்துப் பார்த்த பட்டு அரு வருப்பும் கலவரமும் அடைந்தவளாய், கையில் விரிந்திருந்த அந்த அகலமான காகிதத்துக்கு மேலாய்த் தலையை உயர்த்தி ருக்குவைப் பார்த்தாள். ருக்கு அமைதியாய்ச் சிரித்தாள். அபபோது அங்கே காலடி ஓசை கேட்கவே மீண்டும் அவசர அவசரமாக அந்தக் காகிதத்தைச் சுருட்டினாள். பாதி சுருட்டிய காகிதத்துடன் திருடியைப் போல் பட்டு விழித்துக் கொண்டிருக்கை யில், அந்த சர்வர் கொண்டு வந்த பலகாரங்களை மேசையின் மீது வைத்துவிட்டு வெளியேறினான். அவன் தலை மறைந்தவுடன் படபடத்த குரலில் கேட்டாள் பட்டு: "என்னடி இது அசிங்கம் ? ருக்கு அவளைப் பார்த்துப் பெருந்தன்மையுடன் சிரித்தவாறே சொன்னாள்: இது அசிங்கம்னா நீயும் நானும் - உலகமே அசிங்கம் தான்... அதை நன்னா உத்துப் பார்... பார்க்கவே ஏன் பயப்படறே !... தெளிவான மனசோட பார்..." என்றாள். பட்டு மீண்டும் சுளித்த புருவங்களுடன் அந்தச் சித்திரத்தானை விரித்துப் பார்த்தாள்.