________________
62 ஜெயகாந்தன் சிறுகதைகள் அதில், பிறந்த மேனியாய் ஒரு பக்கம் சாய்ந்து மண்டியிட்டு உட்கார்ந்திருந்தது ஒரு பெண்ணின் உருவம். முதவில் பார்க்கும்போது பழக்கமற்ற கண்களுக்கு அந்த ஓவியம், மனத்திலிருந்த அழுக்கின் காரணமாய் 'சீ' என்று தோன்றியது. அதே படம் இப்போது சற்றுப் பொறுமையாய்ப் பார்க்கையில்— உட்கார்ந்திருக்கும் அந்தத் தோற்றமும், இடதுபுறம் மண்டியிட்டு நீண்டு கிடக்கும் முழங்கால்களின் அமைப்பும், இடுப்பின் வளைவும், வலது கையைத் தரையில் ஊன்றி, வலதுபுறக் கழுத்தை வலிந்து திருப்பி. தோளின் மேல் முகம் புதைந்து கிடக்கும் சிரமும், லயிறும் மார்பும், மதர்ப்பும் மடிப்பும், வரியும் நிழலும் - பார்க்கப் பார்க்க, சித்திரத்தின் அமைப்பும் அழகும் மட்டுமில்லாமல், அந்தத் தோற்றமே எதிரில் உட்கார்ந்திருக்கும் ருக்குவினுடையது என்றும் பட்டுவுக்குத் தெளிவாயின. பட்டு இரண்டுமுறை படத்தின் முக விலாசத்தையும் ருக்குவின் முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். "இது நீதானே " என்ற பட்டுவின் கேள்விக்குப் பெருமிதத்துடன் தலையசைத்தாள் ருக்கு. 'இதை வரைஞ்சது ஒரு ஆம்பிள்ளையா, பொண்ணா?" ருக்கு லேசாகச் சிரித்தாள்: 'இதை வரைஞ்சது ஒரு ஆர்ட்டிஸ்ட் இப்படிச் சொன்னா உனக்குத் திருப்தி ஏற்படாது இல்லையா?"- என்று மீண்டும் சிரித்து "ஆம்பிளை தான் " என்றாள் ருக்கு. கேட்டியே, " இதுக்காக, உனக்கு அவன் பணம் தருவானா? ம்.. தருவா.. எனக்கு உத்தியோகம் என்னன்னு உத்தியோகம் இதுதான்" என்று ருக்கு சொல்லிக்கொண்டிருக்கை யில், பட்டு ருக்குவையே வெறித்துப் பார்த்தாள் அவள் முதுகுக்குப் பின்னால் கண்ணாடியில் தெரியும் தன்னையும் பார்த்தாள் 'தன்னை விடவும் எளிமையும் நல்ல குணமும் கொண்ட ருக்கு, கழுத்தையும் முதுகையும் வெளியில் வரும்போது இழுத்துப் போர்த்திக்கொண்டுவரும் ருக்கு-வயிற்றுக்காக எவன் முன்னாலோ போய் நிர்வாணமாய் நிற்கிறாளே' என்று நினைத்த பட்டுவின் கண் களில் நீர் சுரந்தது. ஆமா .. நீ என்ன செய்துண்டு இருக்கே? அந்த சிநேகிதி என்ன உத்தியோகம் பண்றாள்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று ருக்கு கேட்கவும் பட்டுவுக்குத் துயரம் நெஞ்சில் அடைத்தது: உதட்டில் அழுகை துடித்தது. ஆரம்பத்தில் - சந்தித்தவுடன் - தன்னைப் போலல்லாமல் கௌரவ மாக வாழ்க்கை நடத்துகிறாள் ருக்கு என்று எண்ணிய பட்டு,