பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருளைத் தேடி 63 அவளிடம் தன்னைக் காட்டிக்கொள்ளாமல், அந்தரங்கமாய் விலகி விலகியே பேசிவந்தாள். இப்போது தன்னைப் போலவே இவளும் கெளரவமற்ற, அவமானகரமான பிழைப்பு நடத்துகிறவள்தான் என்று தோன்றியபோது பட்டுவின் மனம் ருக்குவை நெருங்கி வந்தது கௌரவமாய்ப் பிரிந்த தாங்கள் இருவரும் இவ்வளவு கேவலமாய்ச் சந்திக்க நேர்ந்த கசப்பில், திக்கற்ற தனக்கு ஒரு துணையா கவும். வெட்கப்படத்தக்க தன் தொழிலுக்கு ஓர் இணை யாகவும் தன்னோடு மீண்டும் உறவுகொண்டுவிட்ட ஒரு பழைய நட்பின் புதிய நிர்மாணத்திற்காக அவள் துயரம் கலந்த மகிழ்ச்சியே கொண்டாள், இருப்பினும் 'நீ என்ன செய்துண்டு இருக்கே?' என்ற ருக்குவின் கேள்விக்குரிய பதிலை எண்ணிப் பார்த்தபொழுது பட்டு அவமதிப் பால் தலை குனிந்தாள். "பட்டு, வருத்தப்படறியா? உன்னை வருத்தப்படற மாதிரி நான் ஒண்ணும் கேட்கலே முடியுமான என்னாலான உதவியைச் செய்ய லாம்னுதான் கேட்டேன், எங்கே என்னைப் பாரு .." என்று மேஜை வின் குறுக்காக கை நீட்டிப் பட்டுவின் குனிந்த முகத்தை - அதன் அழகை ரசித்தவாறு -- அவளது அழகிய நீண்ட மோவாயைப் பற்றி நிமிர்த்தினாள் ருக்கு. மையால் கரையிட்டு, சிவந்து மலர்ந்திருந்த விழிகளில் கண்ணீர் நிறைந்து இமை ரோமங்கள் நனைந்திருந்தன. பட்டு திடீரென முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் ருக்குவுக்கு அவள் நிலைமை நன்கு புரிந்தது சிறிது நேரத்தில் முகத்தைத் துடைத்துக்கொண்டு. கம்மிய குரலில் பட்டு கூறினாள்: "ருக்கு, நான் என்னையயத்தி உன்கிட்டே மறைச்சு மறைச்சுதான் பேசினேன். யாரோ ஒரு குடும்பத்தோட வந்ததாப் பொய்தான் சொன்னேன். நம்ம ஊர்க்காரன் ஒருத்தனை நம்பி, சினிமா விலே சேரலாம்னு நானே தான் அரசமரத்தாத்து மாமிகிட்டே சொல்லிக்காம ஓடி வந்தேன். அந்தத் துரோகத்துக்கு வேணுங்கறதை இந்த ஒரு வருஷமா அனுப விச்சுட்டேன் நான் என்ன தொழில் செய்து பிழைக்கிறேன்னு சொல்லிக்க நாக்கு கூசறது ஒவ்வொரு நிமிஷமும் அந்த இடத் திலேயிருந்து ஓடிடணும்னுதான் மனசு துடிக்கிறது எங்கே போவேன் ? சொல்லும்... தவைலிதியம்மா, தலைவிதி” என்று மேலே பேச முடியாமல் பெருமூச்சுவிட்டாள் பட்டு. ருக்கு மௌனமாய் ஏதோ யோசித்தவாறு தட்டிலிருந்ததைச் சாப்பிட்டாள். ம். சாப்பிடு" என்று பட்டுவிடம் சொன்னாள். இருவரும் மௌனமாகவே டிபனைச் சாப்பிட்டனர்.