________________
64 ஜெயகாந்தன் சிறுகதைகள் திடீரென்று ருக்கு சொன்னாள்: "...ம்... தலைவிதிதான்; அதுக்கு யார் என்ன செய்யமுடியும்? தலைவிதி நம்மை ஏழையாப் பொறக்க வெச்சுடுத்து. நம்மெ அநாதையாகவும் ஆக்கிடுத்து. ஒரு வேண் சாப்பாட்டுக்கும் ஒரு நல்ல புடவைக்கும் கூட வழியில்லாம நிர்க்கதி யாகவும் நின்னிருக்கோம். தலைவிதியினாலே ஒரு பொண் எளிமையா இருக்கலாம்; கேவலமா ஆயிடக்கூடாது. தலைவிதியின் பேராலே என்ன வேணும்னாலும் செஞ்சுடக்கூடாது. நீ ஏழையானத்துக்குத் தலைவிதிதான் காரணம்னு சொல்லு; நீ கேவலமானத்துக்குக் காரணம் தலைவிதியில்லே ; நீதான்!" என்ற ருக்குவின் நயமான உறுதியான பேச்சைக் கேட்டு உதட்டைக் கடித்தவாறு குற்ற உணர்ச்சியோடு தலை குனிந்தாள் பட்டு. செம்மை ருக்கு தொடர்ந்து சொன்னாள்: "வறுமையிலதான் வேணும். பலஹீனப்பட்டுப்போன உடம்பை நோய்க் கிருமிகள் வந்து தாக்கறமாதிரி, மனசை பலவீனப்படவிட்டா எல்லாக் குணக் கேடுகளும் வந்துடும். வறுமையினாலே மனம் பலப்படணும் : கஷ்டம் வந்துட்டுதுன்னு தப்பான வழியிலே போய் வாழ்க்கையை கெடுத்துக்கறதனாலே கஷ்டம் கொறைஞ்சுடுமா? அப்படி கெட்டுப் போறதே ஒரு கையாலாகாத்தனம், இல்லையா? இவ்வளவும் ஏன் சொல்றேன்னா, இப்படிப்பட்ட நிலைக்கு நானும் ஆளாகியிருக்க லாம்..." என்று எதையோ அவள் விவரிக்க நினைத்தபோது, சர்வர் குறுக்கிட்டான்... "அப்புறம் காப்பிதானே ?" என்று அறைக் கதவின் அப்புறத் திலேயே நின்று கேட்ட சர்வரிடம் 'ஆம்' என்று தலையாட்டினாள் ருக்கு. அதே நேரத்தில் பட்டு யோசித்தாள்: 'ஒரு பெண் எளிமையாக இருக்கலாம்; கேவலமா ஆயிடக்கூடாதுன்னு நியாயம் பேசற இவளும் கேவலமான காரியத்தைத்தானே தொழிலா வெச்சிருக்கா...' என்ற நினைப்போடு கையில் சுருட்டி வைத்திருந்த அந்தச் சித்திரத் தாளை மீண்டும் ஒருமுறை கொஞ்சம் பிரித்துப பார்வையைச் செலுத்திய பட்டு, உதட்டோரத்தில் லேசாகச் சிரித்துக்கொள்ளு வதை ருக்குவும் கண்ணுற்றாள். அந்தப் படத்தையே வெறித்துப் பார்த்தவாறு கைத்துப்போன உணர்ச்சியுடன் சொன்னாள் பட்டு: "நீ எப்பவும் எதையும் ஆற அமர யோசிக்கிறவ: அடக்கமானவ; என்னெ மாதிரி படபடன்னு நிக்கறவ இல்லை. இவ்வளவும் சொல்ற உன் கதியும் இப்படித்தானே கேவலமா ஆயிடுத்து ?" என்று கூறி விஷமத்தோடும் துயரத்தோடும்