பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 ஜெயகாந்தன் சிறுகதைகள் மாதிரி சந்தர்ப்பங்கள் வர்ரபோது தனக்குத்தானே உழைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமில்லாத ஓர் அநாதையான வயசுப்பொண்ணுக்கு உலகம் ரகசியமா ஓடிவந்து செய்யற உதவி-உனக்குக் கெடச் சிருக்கிற தொழில்தான். ஒரு தடவை எக்ஸிபிஷன்லே ஒரு ஸ்டால்லே வேலைக்கிப் போனேன். ஒரு நாளைக்கு இரண்டு ரூபா சம்பளம்னு கேட்டப்போ எனக்கு மனசு குளிர்ந்தது. அங்கே எனக்கு ஒரு வேலையும் இல்லை; வரவா கேக்கற அவசியமுள்ள, அவசியமில்லாத அநாவசியக் கேள்விகளுக்கெல்லாம். சிரிச்ச முகத்தோட பதில் சொல்லிண்டு இருக்கணும் "நான் வேலைக்குப் போனது ஒரு பவுடர் ஸ்னோ ஸ்டால் வேலைக்குப்போன அடுத்த நாள் அந்த ஸேல்ஸ் மானேஜர், எனனைக் கூப்பிட்டுச் சொனனார்- நம்ம ஸ்னோவையும் பவுடரையும் மத்த வாளை உபயோகிக்கணும்னு சொலறதுக்கு முன்னே நாமும் கொஞ்சம் உபயோகிக்கணும்'னு அதனாலே நான் அலங்காரமும் செய்துண் டேன். இதெப் பார்த்து அந்தச் சொந்தக்கார மனுஷாள் எல்லாம் தப்பாத்தான் பேசினா. அப்புறம்தான அந்த வீட்டிலேயே ஒரு ரூமை வீட்டுக்காரங்க கிட்டே கேட்டு வாடகைக்குப் பிடிச்சிண்டு தனியாவே வாழறதுன்னு ஒரு முடிவு பண்ணினேன் ரெண்டு மாசம் எக்ஸிபிஷன் முடியற வரைக்கும் என் வாழ்க்கை கஷ்டமில்லாம ஓடித்து எக்ஸிபிஷன் முடியறதுக்கு முதல் நாள் அந்த ஸேல்ஸ் மானேஜர் எனகிட்டே வந்து ரொம்ப ஆதரவோட என்னெபபத்தி விசாரிச்சார் வயசிலே எனக்குத் தகபபனார் மாதிரி இருந்ததாவே என்னோட நிராதரவான நெலமையை அவர் கிட்டே சொன்னேன. அவர் ஓர் அட்ரஸ் கொடுத்து மறுநாள் அங்கே வந்து சந்திக்கச் சொன்னார். மறுநாள் நான் அங்கே போனா ம்ஹும்! என்னத்தைச் சொல்றது? அவர் எனக்குக் காட்டின வழியே, இப்ப நீ இருக்கியே இந்தப் பிழைப்புத்தான். நான யோசிச்சேன : ' இது தானா வழி... இது ஒண்ணுதானா வழி. வேற வழியே கிடையாதா வாழறத்துக்கு?'ன்னு யோசிச்சேன் ! இப்படி ஒரு வழி இருக்கிறதா நெனைச்சாலே வேற வழி புலப்படாது பட்டினி கெடந்து அநாதைப் பொணமா சாகிறதானாலும் சரி, இந்தப் பிழைப்பே எனக்கு வாண்டாம்னு வந்துட்டேன் " என்று சொல்லி தம்ளரில் ஆறிக் கொண்டிருந்த காப்பியை மடமடவெனக் குடித்தாள் ருக்கு. நான் இருக்கிற வீட்டிலே மாடிமேலே ஒருத்தர் குடியிருந்தார்' என்று கூறுகையில் அவள் குரலில் ஒரு மாற்றமும், முகத்தில் ஒரு மலர்ச்சியும், கண்களில் ஒரு கலக்கமும் பிறந்ததைப் பட்டு கவனித் தாள்.