பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருனைத் தேடி 67 "தான் கஷ்டப்படறபோதெல்லாம், நிராதரவாய்க் கண்கலங்கி நிற்கும்போதெல்லாம், அந்தச் சொந்தக்கார மனுஷா என்னைச் சுடு சொற்களாலே வடுப்படுத்தின நேரத்திலே எல்லாம், அவர் என்னெப் பார்க்கிற பார்வையிலே எனக்கு ஒரு ஆறுதல் இருந்தது. அவர் எனக்கு உதவி செய்ய முடியும்னும் செய்வார்னும் தோணித்து. அன்னிக்கு ஸேல்ஸ் மானேஜரைப் போய்ப் பார்த்துட்டு மனம் உடைஞ்சு திரும்பி வாரபோது அவரை வழியிலே பார்த்தேன்..என் நம்பிக்கைக்குத் தகுந்தமாதிரி அவரி உதவி செய்ய முன் வந்தார்... *நீங்க எங்கே போயிட்டு வாரீங்கன்னு எனக்குத் தெரியும்'னு அவர் என்கிட்டே பேச ஆரம்பிச்சார். 'ஐயோ தெய்வமே ! என்னைப்பத்தி அநியாயமா இவர் தப்பா நெனைக்கும்படி ஆயிடுத்தே'ன்னு தெனைச்சப்போ, எனக்கு அழுகையை அடக்க முடியலே... ஆனா அவர் சிரிச்சுண்டே சொன்னார்; அதனாலே ஒண்ணும் தப்பில்லே - உங்களுக்குத் தெரியாமல்தான் நீங்க போயிருக்கீங்க; தெரிஞ்சவுடனே மனசுக்குப் பிடிக்காம திரும்பி வந்துட்டீங்கன்னும் எனக்குத் தெரியும். அடுத்தபடி என்ன செய்யப் போறீங்க?”ன்னு கேட்டார்.. என்னைப்பத்தி அவ்வளவு அக்கறை எடுத்துண்டுஎன்னை அவர் கவனிச்சுண்டு வரார்னு தெரிஞ்சப்ப 'நீங்க சொல்றபடி கேக்கறேன்'னு சொல்லணும் போலத் தோணித்து. ஆனா என்னாவே ஒண்ணுமே சொல்ல முடியல்லே - பேசாம நின்னேன் அவரே பேசினார்: *உங்களை, உங்க மனசை, அறிவை நான் நன்னா புருஞ்சிண்டிருக்கிறவன். சொன்னாஉங்களுக்கு ரொமப ஆச்சரியமா இருக்கும் எதையும் தப்பா நெனைச்சுக்க மாட்டீங்கன்னு நம்பறேன்; நாக்ைகு காலையிலே என்னோட வாரதான உங்களை ஒரு கௌரவ மான காரியத்தில் ஈடுபடுத்தலாம்னு ஆசைப்படறேன்'னு அவர் சொன்னப்ப, என் வாழ்க்கைக்கே விடிவு வந்துட்டதுனனு நெனைச்சுப் பூரிச்சுப் போனேன்... என்று சொல்லி நெஞ்சவிரிய ஒரு நெடுமூச்சிழுத்தாள் ருக்கு. அப்போது மீண்டும் சர்வர் வந்து எட்டிப் பார்க்கவே "என்ன பட்டு, இன்னொரு காப்பி சாப்பிடுவோமா" என்று வினவினாள் ருக்கு. எனக்கு வேண்டாம்...” என்று பட்டு மறுத்ததும், "காப்பிக்காக இல்லே... இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசலாம்... அதுவு மில்லாம முதல் காபி ரொம்ப ஆறிப் போச்சு-ஒரு காபியை ஆளுக்குப் பாதி சாப்பிடலாமே-ம். ஒரு காபி கொண்டு வாங்க”-என்று அவளிடத்தில் பேசி, சர்வரிடம் கூறினாள் ருக்கு.