பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

69 ஜெயகாந்தன் சிறுகதைகள் "அடுத்த நாள் அவரோட, அவர் அழெச்சிண்டு போன இடத் துக்குப் போனேன் ... அதுவரைக்கும் எனக்குத் தெரியாது அவர் ஒரு பெரிய ' ஆர்டிஸ்ட்'னு. அந்த இடமே ஒரு புனிதமான கோவில் மாதிரி இருந்தது. 'சித்ர, சில்ப கலாசாலைன்னு கேள்விப்பட்டிருக் கியோ ?... அங்கேதான போனேன். வெளி வராந்தாவிலே பத்து இருபது மாணவர்கள் மெழுகிலே சிலைகள் செய்துண்டிருந்தா... உள்ளே ஒரு ஹால்லே 'கிளாஸ்' நடந்துண்டிருந்தது. என்னை மேல் மாடிக்கு அழைச்சிண்டு போனார். அங்கே சுவரிலே மாட்டி யிருந்த படங்களைப் பார்க்கறசசே எனக்கு உடம்பெல்லாம் கூசித்து.. இதெல்லாம் பார்த்துண்டு இருங்கோ'ன்னு சொல்லிட்டு அவர் கீழே போனார். நான் அந்த ஹாலை நன்னா கத்திப் பார்த்தேன்... ஹால் நடுவிலே ஒரு பெரிய மேடை மாதிரி இருந்தது. அதுக்கு நாலு பக்கமும் -மேலே பெரிய லேட்டுகள் ... அந்த மேடை இஷ்டப்படி திருப்பக்கூடிய சுழல்மேடை ; அதைச் சுத்திலும் ஸ்டாண்டுகளும் பக்கத்தில் ஸ்டூல்லே சித்திரம் தீட்டறத்துக்கான வர்ணம், பென்சில், பிரஷ் - என்னென்னவோ இருந்தது அந்தப் படங்கள் எல்லாம் இப்ப நீ பாத்தியே இதைவிடப் பெரிசா. வர்ணம் தீட்டியும் - கரிக் கோட்டிலே வரைஞ்சதும் - பெண்கள், ஆண்கள் எல்லாமே நிர்வாணத் தோற்றமாவே இருந்தது... அதில் ஆபாசம இருக்கிற தாக அப்ப தோணினது ஒரு பிரமைனனு இப்ப புரியறது; ஆனா அப்ப எனக்கு ஒண்ணுமே புரியல்லே அந்தப் படத்துக்குக் கீழே ஒரு ஓரமா 'ருத்ரா'ன்னு எழுதி இருந்தது ஆமா, அவர் பேரு அதுதான்... கொஞ்ச நேரத்துக்கெல்லாம்-ரெண்டு கையிலேயும் ஐஸ் கட்டி மெதக்கற கூல்டிரிங்ஸ் தம்ளரை ஏந்தி என்னைப் பார்த்துச் சிரிச் சிண்டே அவர் வந்தார். எனக்கு அவரைத் தப்பாவோ அசிங்க மாவோ நெனைக்க முடியல்லே... "அவர் என் கையிலே ஒரு தம்ளரைக் குடுத்துட்டு தன கையிலே இருந்ததைக் குடிச்சிண்டே அங்கேஇருந்த படங்களை எல்லாம் கவனமாப் பார்த்தார்...'இவங்க எல்லாம் உங்களை மாதிரி கௌரவ மான பெண்கள்தான்'னு சொன்னார்...நான் பதிலே பேசல்லே... அவர் சொன்னார். 'இது ஒரு கோயில் மாதிரி இங்கே அழகே தெய்வம். இயற்கையே அழகு. அழகான பசுவுககோ, மயிலுக்கோ. காளைக்கோ, மானுக்கோ பத்து முழத் துணியைச் சுத்தி வெச்சா அந்த அழகுகள் எல்லாம் எவ்வளவு ஆபாசமாயிடும்னு கற்பனை செய்து பாருங்கோ'ன்னார்...