பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

கருத வேண்டும். நானும் கருதினேன். ஆனால், இப்போது.

இப்போது முடியவில்லை. அதன் காரணம், உங்களுக்கு என் மீதுள்ள அன்போ, அக்கறையோ குறைந்து விட்டது என்பதால் அல்ல. எனக்கு எதுவோ நேர்ந்து விட்டது. அது என் கல்லூரி வாழ்க்கையின் தொடர்ச்சி, அவ்வளவு தான் ;

சியாம் ! என்னை மன்னிப்பீர்களா ? நீங்கள் மிக்க நல்லவர். பண்புடையவர். உங்களை விட்டுப் போகிறேன் என்றால், வேறுவழி எதுவும் எனக்கில்லை என்பதால் போகாமல் இருந்தால், என் வேதனையே என்னை இங்கே கொன்று விடும். அல்லது, என் வேதனையைக் கொல்வதற் காக என்னையே நான் கொல்ல வேண்டி யிருக்கும். உதார குணமுள்ள நீங்கள், நான் எங்கேயாவது வாழ வேண்டுமென்றுதான் விரும்புவீர்கள். அதனால்தான் போகிறேன்.

என்னைப் பற்றி அதிகம் கவலைப்படா தீர்கள். உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு களங்கம் விளைவித்தேன் என்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் பாதங்களில் விநயத்துடன் விழுந்து வண்ங்குகிறேன். விடை பெறுகிறேன். - -

. உங்கள்

- ரமி மனித மனம் விந்தையானது; விந்தைகள் நிரம்பியது ; ஒத்துப் போவதும் உண்டு : இணங்க ஒப்பாமல், முரண்டு பிடிப்பதும் உண்டு. முரண்படுவது ஒரு விபத்து மாதிரி ; ஆகவே, பரஸ்பரம் சமரச இணக்கம் ஏற்படாமலும், இரு புறமும் விட்டுக் கொடுத்தல் பண்பு உருவாகாமலும்