பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

“ரமி ! நீ என்னுடன் ஒரு நாள், ஒரே நாள் கணவன்மனைவி போல வாழ வேண்டும் “- நரேன் சொல்வான் இப்படி ? - இந்தச் சிந்தனைக்கு அசலான உடைமை யாளி நான் அல்லவா ?- 1957 காலக் கட்டத்தில், நான் எழுதி உமாவில் வெளிப்படுத்திய இரண்டாவது கண்ணகி என்னும் தொடர் கதையில், கண்ணகி-பூங் குழவி என்கிற சகோதரிகட்கிடையில் நிகழ்ந்த மனப் போரின் உச்சக்கட்டமாக அமைந்ததே இந்த நிகழ்ச்சி தானே ?

“என்னுடைய ஆசை நிறைந்த - அன்பு கெழுமிய - அழகு மண்டிய உயிர் அத்தானுடன் ஒரு கணம், ஒரே ஒரு கணம் வாழும் பாக்கியம் கிட்டினால்கூடப் போதும் !-- அந்த அமைதித் திளைப்பிலே- ஆனந்தப் பூரிப்பிலேஅளப்பரிய கனவின் மகிழ்ச்சியிலே அவருடன் ஒரு நூறு வருஷங்கள் கூடி வாழ்ந்தது போன்ற அமைதியைஆனந்தத்தை நான் அடைந்திடுவேனே !” -

பூங்குழலியின் இந்த நாட்குறிப்புத் தான் கதைக்குத் திருப்புமையமாக அமைந்தது.

பூங்குழலியின் சகோதரி கண்ணகிக்கு மட்டுமன்றி, அவள் காதலித்த அத்தான் கரிகாலனுக்கும் அது சோதிப்பாகவே அமைந்தது அல்லவா ? -

இந்நிகழ்ச்சியை வேண்டுமென்றே உங்கள் கதையிலே திணித்ததால், அது உங்கள் கதையோடு ஏன், உங்கள் கதைப் படத்தோடு கூட ஒட்டாமலே போய் விடுகிறது ... அந்நிகழ்ச்சி என் கதைக்கென்று பிறந்தது ஆயிற்றே, இனிய தோழரே ?... ... -

துரி வேனுகோபாலனும் நானும் எழுததுத: தோழர்கள் !- -

தமியின் உள்முகப் போராட்டத்தில் (iaward conflict) நான் புஷ்பாதங்கத்துரையைக் காணவில்லை;-gவேணு,