பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. மணல் வீடுகள்

இந்துமதி:

மணல் வீடுகளின் சலி!

நசின் பத்தினித் தெய்வம்’ என்றொரு புதினத்தை 1963 காலக் கட்டத்தில் வெளியிட்டேன்; அதுவே, முன்னம் உமா இதழில் இரண்டாவது கண்ணகி’ என்னும் மகுடம் புனைந்து 1957-58ல் தொடரும் கதை யாகித் தொடர்ந்தது. அந்தக் கதை போட்டி ஒன்றிற் காக அழைப்பின் பேரில் எழுதப்பட்டது. தொட்ர்கதை யாக அது வெளிவந்து கொண்டிருக்கும்போதே, இரும்புத் திரையும் விரியலாயிற்று! ... அசலையும் நகலையும் இனம் கண்ட தமிழ் உணர்வுமிக்க ரசிகர்கள் பலர் அப்போதே எனக்கு வாய்த்திருந்தனர். அந்நூலில் நான் எழுதி யிருந்த இலக்கியமரபு வழியில் என்ற முகவுரையில் சில வரிகளை மறுபடி எண்ணிப் பார்த்திட வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது :

“...காதலும் கடவுளும் ஒன்று!-மனித வாழ்க் கையிலே சிக்கல்களும் போராட்டங்களும் போர் களும் ஆசாபாசங்களும்,ஏக்கங்களும்,கோபதாபங் களும் மல்லுக்கு நிற்கும் நடைமுறைப் பாவனை களுக்கும், ஒங்காரப் பெருமூச்செறியும் மாயவிதி யின் சித்திர விசித்திரமான எழுத்துக்கும் ஊடாக, ஊடும் பாவுமாக ஊடாடி நின்று உணர்வும்,