பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 111

மூன்று : எழுத்துப் புள்ளிமான் இந்துமதியின் மணல் வீடுகள் !’ - -

இந்த மூன்று கதைகளுக்குமே குழந்தைதான் ஜீவன்.

இந்த ஜீவனுக்கு முதல் ஆதாரம் அளித்தவர் டாக்டர் லக; மி. -

லக்ஷ்மியின் கதையமைப்பில் பின்னர் தடம் ஒற்றி நடந்தது சிவசங்கரி என்னும் பெயர்.

நடுவில் வந்தது மணல் வீடுகள்’.

சமுதாய நீதியையும் சமூக நியதியையும் சீர்குலைக் கும் பச்சை விபச்சாரக் கதைதான் இந்த மணல் வீடுகள்: கதை. ,

க்ருபாகரன்.

புவனா.

சளி.

மூன்று பேரும் முக்கோணப் புள்ளிகள்.

புவனாக்ருபா ஜோடிக்குப் பெயர் சொல்லப் பிள்ளை இல்லை. ஆனாலும், அவர்களுக்குக் குழந்தை தேவைப்படுகிறது!-அந்தப் புண்ணியம் சளி என்கிற பாவிப் பெண்ணுக்குக் கிட்டுகிறது. க்ருபா வாயிலாகச் சளி ஆடிவரும் தேன்’ குழந் தையைப் பெற்றெடுக்கிறாள்.அவளது கடமை யோடு, அவளுடைய கதையும் சந்தி சிரித்த பிறகு, ஒரு முச்சந்தியில் பிரிகிறது :

முரண்பட்ட ஆபாசத்துக்கு, சுஜாதாவைப் போலவே மற்றுமொரு வடிகால் அமைப்பாக விளங்கும் இந்துமதி