பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

நல்ல மனங்களைக்கூட கண்மூடிக் கண் திறக்கும் கைத் இது டிப் பொழுதிற்குள்ளாகவே மயங்கவும் மயக்கவும் செய்ய வல்ல சளி, நமது தமிழ் மண்ணுக்குத் தேவை யில்லை 1. பயன் தரும் பண்பான சிந்தனைகள் !

நான் மறுபடி சொல்வேன் :

அண்ணல் எச்சரித்த மாதிரி, மனித வர்க்கத்திற்கு ஒர் அன்புப் பண்பு இயல்பிலேயே அமையவேண்டும் - ஆகவே, உருவாக்கப்படுகிற படைப்பு இலக்கியத்திலே உருவாகும் எந்த ஒரு பாத்திரமானாலும் சரி, அதன் வாயிலாக, நமது தாய் மண் பயனுறவும் நாட்டு மக்கள் பயனுற்று மனம் சீர்திருந்தி வாழ்வு வளமடையவும் வாய்ப்பு வசதி ஏற்படவும் வேண்டும் இத்தகைய உயர்ந்த சமூகநல நோக்கம் இல்லாத எந்தக் கதையும் எந்தக் கதைப் பாத்திரமும் சமுதாயப் பொது வீதியில் செல்லாக் காசுகளாகவே ஆகிவிடும் - அறிவுக்குப் பொருந்தாத- அறிவுக்குப் பொருத்தமற்ற முரண். Lirl frast 53.pssoor (irrational elements) “tosor, விடுகள் மூலம் பச்சையும் சிவப்புமாக மஞ்சள் எழுத்துக் களில் சித்திரிக்கும் இந்துமதியை எண்ணும்போது, நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஒம்புமின் ! என்னும் புறம்'தான் என் நினைவில் பளிச்சிடும் ! -

சலியின் சமுதாயப் பாடம்:

சளியைத் திரும்பிப் பார்க்கிறேன். என்னுள் காந்தி மகாத்மா மீண்டும் தரிசனம் தருகிறார் : -

“கடவுள் இல்லையென்று மறுக்கும் நாத்திகன்கூட, வாழ்க்கைக்கு ஒர் ஒழுக்கம் கட்டாயம் தேவைதான் என்னும் உண்மையைக் கட்டாயம் ஒப்புக் கொள்ளு. வான் !” .