பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 119

முயலாகிறது’ என்னும் கதை: இது, பின்னர் அவள்அவன்-அது!’ என்ற புரட்சிகரமானபெயருடன் தமிழ்த் திரையில் டான்ஸ் ஆடத் தொடங்கின சடுதியிலேயே, டப்பாவுக்குள் சரணடையவும் நேர்ந்தது. சிவசங்கரியின் இனக் கவர்ச்சி நாயகியான மேனகா முதல் எண் கொண்ட தாசி:

இடைநடுவிலே, இந்துமதியின் மணல் வீடுகள்’ மூலம் சஸி என்னும்படியான மற்றொரு வேசியும் அறிமுக மானாள்; அம்பலமானாள்!

குழந்தையைக் கதைக்குக் கருவாக்கி தெய்வ பக்தி யுடன் படைத்த பண்பட்ட, பண்பாடு கொண்ட நாவலா சிரியை ‘லக்ஷ்மி"யின் அவள் தாயாகிறாள்!” கதை தான் அன்றும் உயர்ந்து நின்றது; இன்றும் உயர்ந்து நிற் கிறது!- உயர்ந்த சிந்தனையாளரின் எழுத்துக்கள் பொறுப்பு மிக்க சமுதாய மக்களுக்கு மத்தியில் அக்கறை யுடன் உயர்ந்து விளங்குவது நியாயம்.

வேலியோரத்துப் பூக்கள் கண்ணைக் கவரலாம்; ஆனால், கருத்தைக் கவருவது இல்லை.

செல்லாக்காசுக்கு நாணய மதிப்போ, நாணயமான அந்தஸ்தோ எப்படிக் கிட்ட முடியும் ?

அரவிந்தச் செல்வராம் அமரர் பி. கோதண்டராமன், “உண்மையை வணங்குவோம்; உண்மையின் ஒர் அங்க மான ஒழுக்கத்தையும் வணங்குவோம்.” என்பதாகத் தமது இலக்கியமும் விமரிசனமும்’ என்னும் நூவில் எடுத்துரைத்திருந்ததை எப்போதும் நான் வணக்கத் துடன், பொறுப்புடன் எண்ணிப் பார்ப்பேன்:

பாவம், இந்துமதி.