பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

குறைவான காலத்தின் எல்லைக்குள்ளேதா ன் கூடுதலான கனவுகள் அழகு காட்டி ஆரவாரம் செய்து அலைக்கழிக்கவும் செய்கின்றன.

ஆகவேதான், விளையாட்டுக் கேந்திரமாக ஆக வேண்டிய இந்த வாழ்க்கை, இந்த மண்ணுலக வாழ்க்கை, ஒரு சோதனையாகவும், போராட்டமாகவும் ஏன், ஒரு போராகவும் கூட அமைந்து விடுகிறது.

வாழ்க்கையோடு மனிதன் விளையாடவும், மனித னோடு வாழ்க்கை விளையாடவும் வேண்டிய நிர்ப்பந்த நியதியிலே, இவ்விளையாட்டுக்கான விதியை, வெற்றி தோல்வி என்னும் முதலும் முடிவுமான ஒரு வினைவிதியை வரம்பறுத்துக் காட்டித் தீர்ப்பை வழங்கிடும் முதல் உரிமையும் கடைசி உறவும் பூண்டவன் அவன்'; அலகிலா விளையாட்டுடையான் அவன். அவன் இந்த மனித னுக்கு முதன் முதலாகக் காண்பிக்கிற காட்சிகள் இரண்டு! ஒன்று: தாய். அடுத்தது, மண்.

ஆமாம் ; பெண்தான் தாய் !-தாய்தான் பெண் !

பெருமையும் பெருமிதமும் இரண்டறக் கலந்திட்ட அருமைமிகு த மி ழ் மண்ணைத் தேடிப் பிறந்திட நற்பாக்கியம் செய்தவள் பாலா !

பாலா தமிழ்ப்பெண் ; நல்லவள் ; வல்லவன். தமிழ்ச் சமுதாயத்தின் நடைமுறை வாழ்க்கைக்கு அவள் மேற் கொண்ட, மேற்கொள்ள நேர்ந்த அவளுடைய வாழ்க்கையே ஒரு சோதனையாக மட்டுமல்லாமல், ஒரு சாதனையாகவும் அமைய நேர்ந்து விடுகிறது . இது, அவள் விதியல்ல :-அவள் விதித்த விதி 1-இல்லை யெனில், நல்லவளான அவளுக்குப் பொல்லாதவனான ஜெகன் கணவனாக வாய்த்திருப்பானா ?

பாலா செளபாக்கியவதி.

அவள் சுகந்தத்தின் நித்திய மல்லிகை.