பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 125

கைமாறுகிறது. பிழைக்க வேண்டிய கிழவரின் உயிர் அடங்கி விட நேர்கிறது :- இதன் எதிர்ப் பலனாகவே, பாலாவின் மருத்துவப் பணிப் பெண் பணிக்கும் சோதனை ஏற்பட்டுவிடுகிறது ! - ரூபாய் பத்தாயிரம் நஷ்ட ஈடு கொடுத்தால் தான் அவளது உத்தியோகம் நிலைக்குமென்ற ஆணை மேலிடத்திலிருத்து வருகிறது. பாவம், அவள் அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவாள் ? யார் யாரையோ கெஞ்சுகிறாள் ! பலன் இல்லை ! -பாவம், அவள்- பாலா தடு மாறுகிறாள் ; தத்தளிக்கிறாள் ; உருகுகிறாள் ; உருக்குலைகிறாள் !

இந்நிலையிலேதான் அந்தமருத்துவமனையில் துரைபாண்டி என்கிற முரடன் ஒருவன் சிகிச்சைப் பெற்று வருகிறான். அவனுக்கும் கண்டிப்பு நிறைந்த பாலாவைப் பிடிப்பதில்லைதான்.

அன்பு மனம் படைத்த, ஆனால், கடமையில் கண்டிப்புமிக்க பாலா கவரிமான் ; மானம் பறி போக ஒப்பாமல், ஓர் இரவில் உயிரை மாய்த்துக் கொள்ளவும் தயாராகிறாள். அன்றிரவுதான் அவளுக்கு கடைசி இரவு பணி முறையில் அதுவே அவளுக்கு இறுதி நாள் !

கடமையின் கடைசி நேரத்திலாவது, நோயாளிகள் எல்லோரிடமும் அன்போடும் பரி வோடும் நடந்து கொள்ள வேண்டுமென்ற நினைப்புடன் நோயாளிகளிடம் அன்பு பாராட்டு கிறாள் பாலா.

உடல் நோயின் தீவிரம் காரணமாக, அறுவைச் சிகிச்சையில் கைகளை இழக்க வேண்டிய அவல நிலைக்குத் தயாராகும் துரைப் பாண்டிகைகளைக் குவித்துபாலாவையும்கும்பிடு கிறான் : “தான் நிறையப் பாவம் செஞ்சவன் ;