பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

ஒப்பற்ற சமுதாயச் சேதியாகவும் ஒலிக்கும்; எதி

ரொலிக்கும்.

ஒர் ஆதரிசத் தாயாக மாறும் பண்பும், மாற வேண்டிய பக்குவமும் சித்திக்கப் பெற்ற இதே பாலா தானே நல்லதொரு தமிழ்க் குடும்பத்தின் நல்ல குல விளக் காகவும் விளங்கினாள் ?-ஆனால், இதே பாலாவேதான் பின் ஒரு சமயத்தில் ரோஷம் மண்டிய தமிழச்சியாக உருக்காட்டவும் ஒரு படலம் விரிகிறது -இது மாயவிதி விரித்த சிலந்தி வலையல்ல ; பாலாவைக் கட்டிக்கொண்ட ஜெகன் என்ற அயோக்கியன், கொண்டவளை-உயிர் கொண்டவளை வாய்க்கு வந்தவாறு ஏசிப் பழி சுமத் தினால், தெய்வத்தின் திருவுள்ளத்திற்கு அடுக்குமா, என்ன ? தெய்வம் மிரண்டால், உலகம் கொள்ளுமா ?பெண் தெய்வம், மனிதத் தன்மை மாறாமல் புயல் ஆகிறது : எரிமலை ஆகிறது.

துரோகியான தன் துணைவன் ஜெகனது கெட்ட சகவாசங்கள் அத்தனையையும் கண்ணுக்குக் கண்ணாகக் கண்டு, அவனை இனிமேல் சத்தியமாகத் திருத்தவே முடியாதென்கிற ஒரு துயர முடிவுக்கு வந்த பின், இவனால் ஒரு பிரஜையை உருவாக்குவதை விடப் பெரிய தேசத் துரோகம் எதுவுமே இல்லை என்னும் ஒரு கடைசி முடிவுக்கும் என்றைக்கோ வந்து விட்டவள் பாலா :நிழலுக்கு அண்டும் குடும்பத்து மனையிலும், பணிக்கு ஒண்டும் மருத்துவமனையிலும் வீணான, பொய்யான, பாவமான ப ழி க ைள ச் சுமத்திய கணவனையும், கணவனைச் சார்ந்திருந்த அவனது உற்றார் உறவினர் களையும் துறக்கவும் வேண்டிய சூழலுக்கும் ஆளானாள். அவ்வீட்டை விட்டுத் தான் வெளியேறப் போகும் விவரத்தை வீட்டாரிடம் வெளியிடுகிறாள் பாலா : “இன்னியிலேருந்து நான் தனியா வீடு பார்த்துக்கிட்டுப் போகப் போறேன். இனிமே எனக்கும் இந்தக் குடும்பத் துக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது ; இதைச்