பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

பேணிப் பாதுகாத்திட வேண்டிய நியாயமான பொறுப்பும், சீரான கடமையும், அன்பான அக்கறை யும், செம்மையான தர்மமும் படைப்பிலக்கியத்தின் கர்த்தர்களையே சாரும், சேரும் என்பதும் இப்போது தெளிவாகலாம்

ஆரோக்கியமான இலக்கியம்தான் சமூகத்தை ஆரோக் கியமுடையதாக ஆக்கும் ஆக்கவும் முடியும் !

ஆகவே தான், ஆரோக்கியமான எழுத்துக்களே இப் போது நமது சமுதாயத்துக்குத் தேவைப்படுகின்றன !

ஆனால்

நமது அன்பான தமிழ்ச் சமுதாயத்தில் வெளிப் படுத்தப்பட்டு வருகின்ற படைப்பு இலக்கியம், இன்றைய நிலவரத்தில் பெருமைமிகு நமது தமிழ்ச் சமுதாயத்தை எந்த அளவிற்கு வாழ வைத்து, எந்த எல்லையில் அதன் நல்வாழ்த்துதல்களைப் பெற்று வ ரு கி ற .ெ த ன் னு ம் உண்மை நிலையை மீண்டும் ஆராயும் பொழுது, ஆரோக்கியம் நிரம்பிய மகிழ்ச்சியைக் காட்டிலும், நோய்ப்பீதி நிறைந்த கவலைதான் மேலோங்கி நிற்கிறது. படைப்பின் இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் ஆன்மாவாகத் திகழ்வதால், அது சமூகத்தைப் பெருமை யோடும் பெருமிதத்தோடும் பாதுகாக்க வேண்டியது, அப் படைப்பிலக்கியத்தின் தார்மீகக் கடமையாகவும் அமைகிறதென்றும் நாம் கொள்ளலாம். சமூகத்துக்கு நல்ல வழியைக் காட்டுவதும், காட்டவேண்டியதும் அந்த இலக்கியப் படைப்பின் சத்தியக் கடனாகவும் அமைய வேண்டுமென்றும் நாம் கொள்ள வேண்டும்.

பொதுவான, பொதுப்படையான இவ்விதியைக் கட்டிக்காத்து இலக்கியப்பணி செய்து கொண்டிருக்கும்